Thursday, November 26, 2026 | 3:11 PM IST

நான் அப்ரூவர் ! நியோமேக்ஸ் வழக்கில் ரகசியம் உடைக்கும் A93 சுரேஷ் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ், நியோமேக்ஸ் நிறுவனத்தில் மண்டல தலைமை இயக்குநராக பொறுப்பில் இருந்தவர். நியோமேக்ஸ் வழக்கில் சிக்கிய ஒராண்டுக்கு முன்பிருந்தே, அதன் வணிக நடவடிக்கைகள் சர்ச்சைக்குரிய முறையில் இருப்பதாக வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்தவர். அதன் காரணமாகவே, நியோமேக்ஸ் தலைமையால் ஓரங்கட்டப்பட்டவர். நீதிமன்ற விசாரணையில் இவரது குழுவினர் தயாரித்த மென்பொருள் தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்றுவரும் பின்னணியில் அங்குசம் சார்பில், அவரை நேர்காணல் செய்தோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தற்போது, ஏ-93 ஆக வழக்கில் சிக்கி சிறை சென்று பிணையில் இருந்துவரும் தூத்துக்குடி சுரேஷ், நியோமேக்ஸ் சிக்கலை தீர்ப்பதற்கு போலீசாருக்கும் நீதிமன்றத்திற்கும் உதவும் வகையில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தும் தனது கோரிக்கையை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஏற்க மறுப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், தமது குழுவினரின் கூட்டு முயற்சியில் உருவான மென்பொருளை தீர்வுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் சிலர் முட்டுக்கட்டை போட்டுவருவதாகவும் குறிப்பிடுகிறார். இவை உள்ளிட்டு நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு ரகசியங்களை உடைக்கிறார், தூத்துக்குடி சுரேஷ்.

நேர்காணல் : வே.தினகரன்.

வீடியோ : மகா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.