லெமன்லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம்.
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’
It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'
அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம்.
இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் , என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத்தரக்கூடியபடமாக இருக்கும்.
இந்தப்படத்திற்க்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.
எடிட்டர் செல்வா RK , படத்தின் கலை இயக்குனர் ஜெய்யரகு , மற்றும் சண்டைபயிற்சி ஸ்டன்னர் சாம், அனைவரது பங்களிப்பும் மிகமுக்கியமானது. படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் இந்தபடத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை சுற்றி கதை இருப்பதால் ஒளிப்பதிவுக்கென்று மெனக்கெட்டிருக்கிறார்.
இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். ஜாலியான ஒரு படம் பண்ணியிருக்கிறோம்.
ஜனவரி 25 தியேட்டரில் வெளியாகிறது, சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறார்கள். என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending