பட்டா மாற்ற ரூ 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய VAO அதிரடியாக கைது !
பட்டா மாற்றம் செய்ய, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய VAO வை, லஞ்ச ஒழிப்பு. போலீசார் கைது செய்தனர். .
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ள கீழ் அழிஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு என்கிற விவசாயி. இவர், தனது சொந்த பயன்பாட்டில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி, விண்ணப்பம் செய்திருந்தார்.
இதற்காக மதலபட்டு VAO பிரபாகரன் என்பவரை விண்ணம் குறித்து விசாரித்து உள்ளார். அப்போது அவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.40,000 லஞ்சம் கொடுத்தால் செய்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். VAO , இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனு இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் 11.01.2024 சீனு, VAO பிரபாகரனை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது பிரபாகரன் அந்த பணத்தை வாங்கி பையில் வைக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் பிரபாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அவரை கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.