அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘கிங்ஸ்டன்’  ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் பண்ணிய எஸ்.கே.!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான ‘இசை அசுரன்’  ஜி. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக   நடித்திருக்கும் ‘ கிங்ஸ்டன்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீஃப் பிசினஸ் ஆபீசர் உமேஷ் குமார் பன்சால் கூறும் போது, ” தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு ‘கிங்ஸ்டன்’ படம் ஒரு சான்றாகும். ஜி.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களைக்  கவரும்.  இந்த பிரம்மாண்டமான படைப்பில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.” என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ கிங்ஸ்டன்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார்,  திவ்ய பாரதி, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன் , குமரவேல் , சபு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு,   ஜி..வி. பிரகாஷ் குமார் இசை,  வசனம் தீவிக் , படத் தொகுப்பு  ஷான் லோகேஷ், எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கம், திலீப் சுப்பராயன்  சண்டைப் பயிற்சி,  தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

'கிங்ஸ்டன்' இந்தப் படத்தின் மூலம் ஜி.வி.பி. முதன்முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இப்படம் அவர் நடிப்பில் உருவாகும் 25- வது படமாகும்.

இந்தப்படத்தின் டீசர் ஜனவரி 09-ஆம் தேதியன்று வெளியாகும் என பட தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.‌

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.