அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத அமைப்பின் சார்பில் வைர விருது அந்தஸ்து….

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத அமைப்பு சார்பில் வைர விருது அந்தஸ்து…. திருச்சி காவேரி மருத்துவமனை பல்துறை அணுகுமுறை, சுகாதார பராமரிப்பு, நவீன மருத்துவ தொழில்நுட்பம், தலைசிறந்த மருத்துவ குழுவினர் கொண்டு பல்வேறு துறைகளில் மருத்துவ சேவை செய்து வருகிறது.

இந்நிலையில் பக்கவாத சிகிச்சையில் மேம்பட்ட சிகிச்சை முறைகள், சரியான நேரத்தில் தலையீடுகள், அதில் நவீன வசதிகள், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக உலக பக்கவாத அமைப்பு( WORLD  STROKE ORGANISATION) திருச்சி காவேரி மருத்துவமனைக்கு வைர அந்தஸ்து விருதினை வழங்கி கௌரவித்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது குறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது மருத்துவ பராமரிப்பு ,நோயாளி விளைவுகள் மற்றும் விரிவான பக்கவாத மேலாண்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களை தொடர்ந்து நிரூபிக்கும் சுகாதார நிறுவனங்களுக்கு வேர்ல்ட் ஸ்ட்ரோக் ஆர்கனைசேஸன் வைர அந்தஸ்து வழங்குகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி காவேரி மருத்துவமனை காவேரி மருத்துவமனையின் பல் துறை அணுகுமுறை, புதுமையான பக்கவாத பராமரிப்பு நெறிமுறைகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தொடர்ச்சியான கல்வி ஆகியவற்றின் மூலம் இந்த மதிப்பு மிக கௌரவத்தை அடைவதற்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

https://www.livyashree.com/

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் காவேரி மருத்துவமனையில் தலைமை மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் கூறும் பொழுது எங்கள் நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு எங்கள் முதன்மையான முன்னுரிமையாக  உள்ளது . பக்கவாத நோயாளிகளுக்கு சிறந்த விளைவுகளை வழங்க உறுதி கொண்டுள்ள  எங்கள் குழுவினர் கடின உழைப்பிற்கு இந்த விருது ஒரு சான்றாகும் மேலும் இந்த அங்கீகாரம் பக்கவாத சிகிச்சையின் தரத்தை தொடர்ந்து முன்னேற்ற எங்களை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது டாக்டர்கள் சந்தோஷ் குமார், ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

—   அங்குசம் செய்திகள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.