அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !
விஷுவல் மீடியா துறையில் தனி அடையாளத்தோடு சாதிக்க வேண்டுமென்ற வேட்கை கொண்டவரா நீங்கள்? தகுதியும் திறமையும் இருந்தும் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், அந்த அழகிய தருணத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்?
இதோ, இந்த பொன்னான அறிவிப்பு உங்களுக்காகத்தான். அங்குசம் மீடியா வழங்கும் “அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி உங்களைப் போன்றவர்களுக்காகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெறுமனே கலை படைப்பாக மட்டுமே அமைந்துவிடாமல், “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதே” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன் இந்த குறும்பட போட்டியை அறிவித்திருக்கிறது, அங்குசம் மீடியா.
குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
- குறைந்தது 1 நிமிடம் முதல் அதிகபட்சம் 8 நிமிடங்கள் (இறுதி தலைப்புகளுடன் சேர்த்து) வரையிலான குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- குறும்படம் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். சப்-டைட்டில் ஆங்கிலம் சேர்ப்பது விருப்பம்.
- கதையின் சுருக்கம் (அதிகபட்சம் 100 எழுத்துகள்) தமிழில் வழங்கப்பட வேண்டும்.
- அதிகபட்சம் 30 விநாடிகள் கொண்ட டிரைலரும் குறும்படத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- உயர் தரத்தில் A4 அளவிலான போஸ்டர் குறும்படத்துடன் சேர்த்து சமர்ப்பிப்பது கட்டாயம்.
- படங்கள் MP4 அல்லது MOV வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- காப்புரிமை கொண்ட உள்ளடக்கம் (படம், இசை போன்றவை) குறும்படத்தில் பயன்படுத்தக் கூடாது.
- குறும்படம், இதற்கு முன்னர் வேறு எந்த சமூக வலைதளத்திலும் வெளியிடப்பட்டதாக இருக்கக்கூடாது.
- புதிய, வெளியிடப்படாத படங்களே ஏற்கப்படும்.
- போட்டியாளர்கள் தங்களது குறும்படத்தை Google Drive-இல் பதிவேற்றம் செய்து, அதன் இணைப்பை (angusamcinema@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டியாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
- அணியினரின் முழுப் பெயர் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டும்.
- படங்கள் கதை, தரம், படைப்பாற்றல் மற்றும் மொத்தத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
- மொத்தம் 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும்.
- ஒவ்வொரு குறும்படத்திற்கும் பதிவு கட்டணம் ரூ. 999/- ஆகும்.
விண்ணப்பிக்க மற்றும் குறும்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் – 27, 2025.
குறும்படப் போட்டிக்கு பதிவு செய்ய
https://forms.gle/MY4JL7upZPW62uxF6