அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குயிலினங்கள் சற்று கொடூரமானவை ! பறவைகள் பலவிதம்- தொடா் 18

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சுடலை குயில் : குயிலைப் பற்றி பொதுவாக அறிந்ததெல்லாம் அது அருமையாகப் பாடும் என்பதும், தனக்கென கூடொன்றைக் கட்டிக்கொள்ளாமல் காக்கையின் கூட்டில் தனது முட்டைகளை பொரிப்பதற்காக இட்டுச் செல்லும் என்பதுதான். இந்தக் குயிலில் பல வகைகள் இருக்கின்றன என்று சமீபத்தில் தான் அறிந்துகொண்டேன். சுடலைக்குயில், செவ்விறகுக் கொண்டைக் குயில், அக்கா குயில், குயில், செங்குயில், சக்களத்திக்குயில், கரிச்சான் குயில், கோகிலம் இவையனைத்துமே குயில்களின் வகைகள் என்று அறியப்படுகின்றன. உருவ அளவு தோற்றம் இவைகளில் ஒன்றோடு ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடும் இவை ஒரு விசயத்தில் மற்றும் ஒரே பண்பைக் கொண்டிருக்கின்றன. அதுதான் இந்த ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பு (brood parasites).

ஒவ்வொரு குயிலினமும் தமது முட்டையின் உருவத்தையும், வடிவத்தையும் மிகவும் கவனமாக வளர்க்கும் பறவையின் (host bird) முட்டையினுடையதைப் போல இருக்குமாறு இடுவதை மிகவும் திறமையாக பயின்றுவருகின்றன. அதே போல இப்படி ஒட்டுண்ணியாக வரும் முட்டைகளைக் கண்டு கொள்வதற்கான திறன்களையும் இந்த வளர்க்கும் பறவைகள் வளர்த்துக்கொண்டே தான் வருகின்றன. இப்படி ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பில் குயில்கள் மட்டுமல்லாது, வேறு சில பறவையினங்களும் ஈடுபடுகின்றன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

பறவைகள் பலவிதம்அமெரிக்க கறுப்புத்தலை வாத்து, பழுப்புத்தலை cowbird ஆப்பிரிக்க தேன்காட்டி (hobneyguide) மற்றும் வைடா (whydah) போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஒட்டுண்ணி குஞ்சு வளர்ப்பிலும் ஒரு வேறுபாடு உண்டு. ஆப்பிரிக்க வைடாக்கள் வளர்க்கும் பறவையின் முட்டைகளோடு தமது முட்டைகளையும் இடுகின்றன. தோற்றத்தில் ஒன்றே போல் இருக்கிற இவைகளையும் தமது முட்டைகளென எண்ணி பொறித்து வளர்க்கின்றன வளர்க்கும் பறவைகள்.

குயிலினங்கள் சற்று கொடூரமானவை. தாம் முட்டையிடும் கூட்டில் உள்ள வளர்க்கும் பறவையின் முட்டையை தனது முட்டையின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அப்புறப்படுத்தி விடுகிற கொடுமையைச் செய்யும். இதைவிடக் கொடூரமானது கென்யாவின் தேன்காட்டியின் முறை. இந்தத் தேன்காட்டி குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவரும் போதே, வளைந்த கூர்மையான அலகுகளுடன் பிறக்கின்றன.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

HARINI JEWELLERS TRICHY

பறவைகள் பலவிதம்இதனால் அதை வளர்க்கும் பறவையான செந்தொண்டை – ஈப்பிடிப்பானின் குஞ்சுகளை கொன்று விடுகின்றன. சில நாட்களில், தனது தேவை முடிந்துவிட்ட பிறகு இந்த கூர் அலகுகளும் உதிர்ந்து விடுகின்றன. தனது குஞ்சுகளைக் கொன்ற தேன்காட்டிக் குஞ்சுகளுக்கு இந்த ஈப்பிடிப்பான்கள் உணவூட்டி வளர்க்கின்றன.

இப்படி தங்களை ஏமாற்றும் பறவையின் முட்டைகளை கண்டுபிடிக்க வளர்க்கும் பறவைகளும் முயன்றே வருகின்றன. ஆனால், அதைத் திறமையாக ஏமாற்றியே வருகின்றன. இந்த ஒட்டுண்ணிப் பறவைகள் என்பதை இப்பறவைகளின் இருப்பே உறுதி செய்கிறது இல்லையா?

தொடரும் …

ஆற்றல் பிரவீன்குமார், சூழல்  செயல்பாட்டாளா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.