அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’
தயாரிப்பு: செளந்தர்யா ரஜினிகாந்த் & மகேஷ் ராஜ் பசலியான். டைரக்டர்: மதன். ஆர்டிஸ்ட் : அபிஷன் ஜீவிந், அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், தேனி முருகன், சரவணன், ஆர்ஜே ஆனந்தி, சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார், டிம்பிள் கண்ணா, சித்தார்த். ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங்: சுரேஷ் குமார், காஸ்ட்யூம் டிசைனர்: பிரியா ரவி, ஆர்ட் டைரக்டர்: ராஜ்கமல், இணைத் தயாரிப்பாளர்: எம்பி.விஜய், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.பாலமுருகன், பிஆர்ஓ: யுவராஜ்.
அக்காவின் ( ஆர்ஜே ஆனந்தி) அன்புக் கட்டளையால் தனது வருங்கால மனைவியின் போட்டோவைக் கூட பார்க்காமல் காஃபி ஷாப் போகிறார் சத்யா( அபிஷன் ஜீவிந்). ஆனந்தி சொன்ன புளூ சர்ட் அடையாளத்தை வைத்து சத்யாவிடம் ஹாய் சொல்கிறார் மோனிஷா ( அனஸ்வரா ராஜன்). இருவரும் ஒரு காஃபி சாப்பிட ஆரம்பித்த பிறகு தனது பள்ளிப் பருவ (+2) காதல் பிரேக் அப் ஆனதை சத்யா சொன்ன பிறகு தான் திருச்சி எஸ்டிஏ பள்ளியில் இருவரும் படித்தது மோனிஷா நினைவுக்கு வருகிறது.
சத்யாவுக்கு இரண்டு வருட ஜூனியர் மோனிஷா . அனிஷாவை (காவ்யா அனில்) காதலித்து பிரேக் அப் ஆன கதையையும் அனிதாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் கதையையும் சத்யா சொல்ல, பாலாஜியை காதலித்து பிரேக் அப் ஆன கதையை மோனிஷா சொல்கிறார். நம்ம எக்ஸ்களை பார்த்து விட்டு நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற முடிவுடன் இருவரும் திருச்சிக்கு பயணமாகிறார்கள். அதன் பிறகு…..? இதான் ‘வித் லவ்’.
அதாவது கடைசி வரை காதலுடன் காதலில் கரைந்து உணர்வில் உருகி சுபத்துடன் முடிகிறது இந்த ‘வித் லவ்’. அனஸ்வரா ராஜனை சந்திக்கும் முன்னதாக அதே காஃபி ஷாப்பில் வேறொரு பெண்ணை அபிஷன் சந்திக்க, தன்னோட பாய் ஃபிரண்டை அப்பெண் அறிமுகப்படுத்த, அபிஷன் அப்செட்டாக … கலகலப்பாகவே ஆரம்பிக்குது படம். ஆனால் திருச்சி எஸ்டிஏ பள்ளி ஃப்ளாஷ் பேக் ஆரம்பித்து இடைவேளை வரை படம் கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்யுது. அதிலும் காவ்யா அனிலை காதலிக்க நடக்கும் சண்டை…”என்னய்யா இது அஞ்சாப்பு படிக்கிற பயலுக மாதிரி ரோட்ல கட்டி உருளுறாய்ங்கன்னு” கூட தோணுச்சு . ஆனால் அந்த சண்டை தான் அனஸ்வரா லவ்வுக்கு வேட்டு வச்சதுங்கிறத ஃப்ளாஷ் பேக்ல கனெக்ஷன் கொடுத்து நிமிர வச்சுட்டாரு டைரக்டர் மதன்.
இடைவேளைக்கு பிறகு தான் வித் லவ் ரொம்பவே டீப் லவ்வா டிராவல் ஆகி ஜென் ஜி மனசுக்குள் ஜில்னெஸ்ஸை ஏற்படுத்தும். ஹீரோவாகிவிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டைரக்டர் அபிஷன் ஜீவிந் எல்லா ஏரியாவிலும் நடிப்பில் டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டார். அதிலும் எக்ஸ் காவ்யா அனிலை அவரது மகனுடன் சந்திக்கும் சீன் செம கிளாஸ் & மாஸ். அனஸ்வரா ராஜன் ஆல் ரவுண்டர் என்றால்…. “அப்புறம் சத்யா வேற எதாவது சொ ல்லணுமா?” இந்த ஒத்த டயலாக் பேசி ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்த சூப்பர் பிளேயர் போல காவ்யா அனில். அபிஷன் அக்கா ஆர்ஜே ஆனந்தி, அப்பா தேனி முருகன், அபிஷனின் நண்பர்கள் என எல்லா கேரக்டர்களையும் நன்கு நடிக்க வைத்து கவனிக்க வைத்துள்ளார் டைரக்டர் மதன். அதிலும் வாத்தியார் சரவணனுக்கு க்ளைமாக்ஸில் செமத்தியான சீன் வைத்து கண்கலங்க வைத்தது.. கண்களுக்குள்ளேயே நிக்குது.
இந்த வித் லவ் நமக்குள் ரொம்ப டீப்பா இறங்கிருக்குன்னா அதுக்கு மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் தான் முக்கியக் காரணம். திருச்சியில் அபிஷனும் அனஸ்வராவும் காவ்யாவைச் சந்தித்த பிறகு சில சீன்கள் சற்று குழப்பத் தான் செய்யுது. எடிட்டர் சுரேஷ் குமார் கவனித்திருக்கலாம் . தங்கள் லவ் பிரேக் அப் ஆனதை நினைத்து அபிஷனும் அனஸ்வராவும் தனித்தனியே அழுவதையும் முகம் கழுவுவதையும் ஃப்ளாஷ் பேக்கில் காட்டி …அதையே அனஸ்வரா வின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கனெக்ட் பண்ணியிருப்பது டைரக்டர் மதன் டச். அதேபோல் வசனங்களும் லவ்வுக்கு வலு சேர்க்கிறது. என்ன ஒண்ணு ஹீரோவும் ஹீரோயினும் சேர்த்து சரக்கடிக்கும் சீனை தவிர்த்திருக்கலாம். எனிவே… வித் லவ்… குட் ஃபீல் லவ்.
அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’ 50/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.