பேருந்து நிறுத்தங்கள் கண்காணிப்பில் – காவல்துறையின் அதிரடி முடிவு!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப அறிவுறுத்தலின்படி திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள மொத்த பேருந்து நிறுத்தங்கள் முறையே திருச்சி 539, புதுக்கோட்டை 646, கரூர் 328, பெரம்பலூர் 211, அரியலூர் 273, தஞ்சாவூர் 691, திருவாரூர் 409, நாகப்பட்டிணம் 138 மற்றும் மயிலாடுதுறை 342 மொத்தம் 3577 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் CCTV Camera முறையே திருச்சி 213, புதுக்கோட்டை 179, கரூர் 136, பெரம்பலூர் 60, அரியலூர் 46, தஞ்சாவூர் 204, திருவாரூர் 63, நாகப்பட்டிணம் 101 மற்றும் மயிலாடுதுறை 67 என மொத்தம் 1069 பேருந்து நிறுத்தங்களில் CCTV Camera பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,
குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்கவும், சந்தேக நபர்களை கண்காணித்தும், சாலை விபத்துகளில் அடையாளம் தெரியாத வாகனங்களை கண்டுபிடிக்கவும், விசாரணையை துரிதப்படுத்தவும் மேலும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் மீதமுள்ள பேருந்து நிறுத்தங்கள் முறையே திருச்சி 326, புதுக்கோட்டை 472, கரூர் 192, பெரம்பலூர் 151, அரியலூர் 227, தஞ்சாவூர் 543, திருவாரூர் 346, நாகப்பட்டிணம் 78 மற்றும் மயிலாடுதுறை 275 மொத்தம் 2610 பேருந்து நிறுத்தங்களில் விரைவாக CCTV Camera-கள் பொருத்த துரித நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.