இந்தியில் பேசிய தயாரிப்பாளர் ! மொழி பெயர்த்து அசத்திய பி.ஆர்.ஓ. !
வெங்கி, ஆனந்த் ஷா, ஆகிய இருவருடன் விஜய் ரங்கநாதன் இணைந்து தயாரித்து டைரக்ட் பண்ணி வருகிற 06-ஆம் தேதி ரிலீசாகிறது ‘ஓ..பட்டர்ஃப்ளை’ படம். இதில் சிபி, நாசர், நிவேதிதா சதீஷ், அதுல், லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : வேதராமன் சங்கரன், இசை : வைசாக் சோமநாத், எடிட்டிங் : புவனேஷ் மணிவண்ணன், காஸ்ட்யூம் டிசைன் : டினா ரொசாரியோ, பி.ஆர்.ஓ : ரியாஸ் கே.அஹமது & பாரஸ் ரியாஸ்.
மார்ச்.06-ஆம் தேதி ரிலீசாவதையொட்டி ‘ஓ பட்டர்ஃப்ளை’யின் சாங்ஸ் & டிரெய்லர் ரிலீஸ் ஃபங்ஷன் சென்னை பரணி ஸ்டுடியோ தியேட்டரில் மார்ச்.01-ஆம் தேதி இரவு நடந்தது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கி பேசும் போது,
“டைரக்டர் என்னிடம் கதை சொன்னதும் ஓகே நான் ஃபைனான்ஸ் பண்றேன்னு சொன்னேன். ஆனா அவரோ தயாரிப்பாளர்களில் நீங்களும் ஒருவர்னு என்னை கமிட் பண்ணிட்டார். படத்தில் இடம் பெறும் ஒரு வீட்டு ஓனர் கொச்சின்ல இருந்தார். அவரைப் பார்த்து பேசி கன்வின்ஸ் பண்ணி பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிப்போச்சு. அந்த வீட்ல பேய்ப்படம் எடுக்கக் கூடாதுன்னு கண்டிஷன் வேற போட்டாரு. அப்பத்தான் தெரிஞ்சது தயாரிப்பாளரா இருக்குறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு” என எதார்த்தத்தைப் பேசினார்.
இன்னொருவரான ஆனந்த்ஷா பேச மைக் முன் வந்து நின்றதுமே, “சாருக்கு இந்தி மட்டும் தான் பேசத் தெரியும். அவர் பேசி முடித்ததும் நம்ம மீடியா நண்பர்களுக்காக தமிழில் நான் மொழி பெயர்க்கிறேன்” என்றார் பி.ஆர்.ஓ.ரியாஸ் அஹமதுவின் மகளும் பி.ஆர்.ஓ.வுமான பாரஸ் ரியாஸ்.
”டைரக்டர் விஜய் ரங்கநாதனின் ஸ்கிரிப்ட் இங்கிலீஷில் இருந்ததால் படிப்பதற்கு எனக்கு ஈஸியாக இருந்தது. ஸ்கிரிப் பிடிச்சதால் தயாரிப்பில் நானும் பங்கெடுத்தேன். சென்னையில் ஆபீஸ் போடும் செலவு கூட வேண்டாம் என பட்ஜெட்டை சிக்கனப்படுத்தினார் டைரக்டர் விஜய்” இதெல்லாம் ஆனந்த் ஷா இந்தியில் பேசியது. பாரஸ் தமிழில் மொழி பெயர்த்ததால் நமக்குப் புரிந்தது.
இந்தப் படம் பேசும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நீண்ட சொற்பொழிவாற்றினார் ஹீரோ சிபி. தனக்கு மேஜர் ஆபரேஷன் நடந்து ஹாஸ்பிடலில் இருந்த போதும் எனக்காக சில மாதங்கள் காத்திருந்த டைரக்டரின் பெருந்தன்மைக்கு நன்றி சொன்னார் ஹீரோயின் நிவேதிதா சதீஷ்.
இந்தப் படத்திற்காக சில வருடங்கள் காத்திருந்து பலரிடம் பேசி சிலரை தயாரிப்பாளராக்க பட்ட கஷ்டத்தையும் தமிழ் பேசத் தெரிந்த பெண்ணைத் தான் ஹீரோயினாக போட வேண்டும் என்பதற்காக நிவேதாவை செலக்ட் பண்ணியதையும் பற்றிப் பேசினார் டைரக்டர் விஜய் ரங்கநாதன்.
— ஜெடிஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.