அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

துண்டிக்கப்பட்ட வி.சே. தலை! பகீர் கிளப்பிய ‘காட்டான்’

திருச்சியில் அடகு நகையை விற்க

‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைகிறார் டைரக்டர் மணிகண்டன். ஆனால் இது ‘முத்து[எ] காட்டான்’ வெப் சீரிஸுக்காக. ஜியோ ஹாட்ஸ்டாருடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்கும் இந்த சீரிஸில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸை மணிகண்டனுடன் இணைந்து இயக்குகிறார் பி.அஜித்குமார். ஒளிப்பதிவு : மது நீலகண்டன், என்.ஷண்முக சுந்தர், இசை :ராஜேஷ் முருகேசன், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வரும் 27-ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகிறான் ‘முத்து[எ] காட்டான்’.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காட்டான்போலீஸ் ஸ்டேஷன் வாசாலில் முத்துவின் [ விஜய் சேதுபதி] துண்டிக்கப்பட்ட தலையுடன் டீசரை வெளியிட்டு பகீர் கிளப்பிய படக்குழு, இப்போது டிரெய்லரையும் வெளியிட்டுள்ளது. முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா? அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வீரனா? என்பதற்கு முரண்பாடான கருத்துள்ளவர்கள் இந்த டிரெய்லரில் பேசியுள்ளனர்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி பேசும் போது, “ஆறு பக்கங்களுடைய கதையின் சுருக்கத்தை மணிகண்டன் கொடுத்ததுமே அவர் கற்பனை செய்து வைத்திருந்த கேரக்டரும் அதன் உலகமும் என்னை ஈர்த்துவிட்டது. ஒரு நடிகனாக எனக்கு மனநிறைவைத் தருகிறது இந்த வெப் சீரிஸ். இதை பார்க்கும் எல்லோரும் அர்த்தமுள்ள ஒன்றை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்கிறார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.