‘சீன்’ படம் எப்படி இருக்கு ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

போலீஸ் டிபார்ட்மெண்டில் க்ரைம் பிராஞ்சில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார் இன்பராஜ் [சூர்யா] டிபார்ட்மெண்டின் சக போலீஸ்காரர்களிடம் சாஃப்டாகவும் ரஃப்பாகவும் பழகும் குணமுள்ளவர் இன்பராஜ். இவருக்கு தீடீரென கண் பார்வை பறி போகிறது. [ஏன் போச்சு, எப்படி போச்சுன்னு டைரக்டர் சொல்லல]. இந்த நிலையில் சென்னை சிட்டியில் வரிசையாக சில கொலைகள் நடக்கின்றன. தடயங்களை மறைப்பதற்காக பிணத்தின் மீது செண்ட் அடிக்கும் சைக்கோ கொலைகாரனை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறது க்ரைம் பிராஞ்ச். கண்பார்வை இல்லாததால் வேலையை ராஜினாமா செய்ய வரும் சூர்யாவை, “இந்தக் கொலைக் கேஸ்களையெல்லாம் நீ தான் கண்டு பிடிக்கணும்” என வேண்டுகோள் வைக்கிறார் க்ரைம் பிராஞ்சின் ஐ.ஜி.யான லால். கொலைகாரனை கண் பார்வை இல்லாத  சூர்யா எப்படிக் கண்டுபிடித்தார்? இதான் டைட்டிலுக்குப் பொருத்தமான இந்த ‘சீன்’.

Scene
Scene

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஆனால் நமக்குத் தான் படத்தின் சீன்களுடன் கனெக்ட் ஆக முடியவில்லை. காரணம் படத்தின் இடைவேளை வரை  எந்த சீனும் இம்ப்ரஸ் பண்ணதாது தான். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ட்ரிப் ஏற்றி, க்ரிப்பாக கொண்டு போயிருக்கிறார் டைரக்டர் ஜித்து மாதவன். ஆனால் கண் பார்வையில்லாதவராக, அதுவும் டிஎஸ்பியாக நடிக்க, நம்ம சூர்யா ரொம்பவே டிரெய்னிங் எடுத்து பக்காவாக பெர்ஃபாமென்ஸ் பண்ணியுள்ளார். குறிப்பாக நஸ்ரியா இவருக்கு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவரின் குரல் உதவியுடன்[கையைத் தொடாத, காது நல்லா கேட்கும்” என ஆர்டர் போடும் தொனி],   சர்வசாதாரணமாக ரோட்டில் நடக்கும் சீன்கள், ஒரு ஃபைட் சீனில் நஸ்ரியாவுக்கு சான்ஸ் கொடுத்தது என சூர்யாவின் அதகளம் தான்.

அதே போல் கொலைகாரனை ரோட்டில்  டைட் குளோசப்பில் பார்த்து மிரட்டுவது, க்ளைமாக்ஸில் தனது வீட்டுக்குள் நுழைந்திருக்கும் கொலைகாரன் நஸ்லெனுடன் மோதும் ஃபைட் [பின்னணி இசை இல்லாமல் நிசப்தமாக ஆரம்பிக்கும் சீனெல்லாம் அபாரம். ஆனால் சில நிமிடங்களிலேயே  டப்பாங்குத்து பாட்டு போட்டு சீனை சின்னாபின்னமாக்கிவிட்டார் மியூசிக் டைரக்டர் சுஷின் ஷ்யாம்.

Scene
Scene

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காட்சி தருகிறார் நஸ்ரியா ஃபஹத். முகத்தில் கொஞ்சம் சுருக்கம் தெரிந்தாலும் நடிப்பில் அதே ஃப்ரென்ஷ்னெஸுடன் கவர்கிறார் நஸ்ரியா. எந்நேரமும் போதைப் பவுடரை மூக்கு வழியே உறிஞ்சும் நல்ல பழக்கம் உள்ளவராக,  நஸ்ரியாவின் அப்பாவாக கஜராஜ் வருகிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய ஹீரோ சூர்யாவுக்கு வில்லனாக, அதாவது கொலைகாரனாக எப்படிப்பட்ட நடிகரைப் போட்டிருக்க வேண்டும்? ஆனால் நஸ்லெனைப் பார்த்தால், “பாவம்யா அந்தப் பய”ங்கிற ரேஞ்சுக்கு இருக்கு. இவரின் கூட்டாளிகளாக வரும் அந்த மாமி கேரக்டரும் ஆட்டோ டிரைவரும் அதைவிட பரிதாபம்.

படத்தில் பெருங்குறையாக நமக்குத் தோணுனது என்னன்னா… சூர்யாவின் அப்பாவாக வரும் ஆனந்தராஜ் பாதிப் பைத்தியம், மீதி வைத்தியம், அம்மாவோ சாராயம் காய்ச்சும் சொர்ணாக்கா, ஃபுல் டைமும் ஃபுல் அடிக்கும் சொப்பன சுந்தரி. நஸ்ரியாவின் அப்பா கஜராஜைப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டோம். சரிப்பா இத்தோட முடிஞ்சிச்சுருன்னு படம் போய்க்கிட்டிருக்கும் போது, மார்ச்சுவரியில நஸ்ரியாவிடம் சூர்யா  தனது காதலைச் சொல்லி செயின் கிஃப்ட் கொடுக்கும் போது நஸ்ரியாவுக்கு வலிப்பு வந்து, நம்மள ஒருவழி பண்ணிருச்சு. படத்தின் ஆரம்ப சீனில் தான் காக்கி யூனிபார்மில் வருகிறார் சூர்யா. அப்புறம் ஃபுல்லா ஆஃப் பேண்ட், டீ சர்ட் தான்.  அதே போல் ஐஜி லாலை “வாடா போடா” என சூர்யா கூப்பிடுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

Scene - சீன்
Scene – சீன்

படத்தில் நமக்கு ஆறுதலாத் தோணுனது என்னன்னா, சூர்யா-நஸ்ரியா இடையிலான ஸ்வீட் லவ்,  சூர்யாவுடன் வேலை பார்க்கும் கான்ஸ்டபிள்களாக வரும் சுரேஷ் மதியழகனும் ராஜ்பிரியனும் மதுரை ஸ்லாங்கில் காமெடியை தூவியிருப்பது தான். மற்றபடி டார்க் காமெடி ஏரியா பெரிதா எடுபடலை.

படத்திற்கான பேஸிக் ஐடியா பெஸ்டாக இருந்தாலும் அதை ஸ்கிரிப்டில் எக்ஸ்கியூட் பண்ண தடுமாறிவிட்டார் மலையாள  டைரக்டர் ஜித்து மாதவன். இருந்தாலும் நம்ம சூர்யாவுக்காக  இந்த சீனுக்கு ஓகே சொல்லலாம்.

அங்குசம் பார்வையில் ‘சீன்’ 48/100

-ஆண்டவர்

 

 

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.