அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”பணக்காரனுக்கும் செல்வந்தனுக்கும் வித்தியாசம் இருக்கு” – சமுத்திரக்கனி சொன்ன உண்மை!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

‘பாத்வே புரொடக்‌ஷன்ஸ்’ அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி டைரக்‌ஷனில் சமுத்திரக்கனி நடித்து வரும் ஏப்ரல்.03-ஆம் தேதி ரிலீசாகிறது ‘கார்மேனி செல்வம்’. இதில் லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, கெளதம் வாசுதேவ் மேனன், அபிநயா, கார்த்திக் குமார், மாஸ்டர் கரண், படவா கோபி, கோதண்டம்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : யுவராஜ் தக்‌ஷன், இசை : ராமானுஜம், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

ஏப்ரல் 03-ஆம் தேதி படம் வெளியாவதால், பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மார்ச்.25-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சமுத்திரக்கனியின் நீண்ட நாள் நண்பரும் எழுத்தாளருமான செந்தமிழன் கலந்து கொண்டார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கார்மேனி செல்வம்விழாவில் பேசியவர்கள்….

லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, “இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பும் எளிமையும் நிரம்பியிருந்தது. அது தான் இப்படத்திலும் இருக்கு”.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அபிநயா [ சைகை மொழியில்], “நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணன் சமுத்திரக்கனியுடன் நடித்தது மகிழ்ச்சி”.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

கோதண்டம், “பொம்பள மனசு பொம்பளைக்குத் தான் தெரியும்னு சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஆம்பள மனசு ஆம்பளைக்குத் தான் தெரியும்னு டைரக்டர் சொல்லியிருக்கார்”.

செந்தமிழன், “இன்று வளைகுடா நாடுகளில் இருக்கும் பிரச்சனையை மூன்று மாதங்களுக்கு முன்பே இப்படத்தில் சொல்லியிருக்கார் டைரக்டர் ராம் சக்ரி. இப்போதைய நெருக்கடி போரினால் வந்தது. இப்படமோ  மன நெருக்கடியைப் பேசுகிறது. சமூக உளவியல் போரினால் எழும் பிரச்சனைகளைப் பேசுகிறது”

கார்மேனி செல்வம்தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு, “குறையொன்றும் இல்லை’ படம் தான் எங்களின் முதல் தயாரிப்பு. அதை கார்த்திக் என்ற பெயரில் டைரக்ட் பண்ணியவர் தான் இப்போது ராம் சக்ரியாக இந்த ‘கார்மேனி செல்வம்’ என்ற இரண்டாவது படத்தையும் டைரக்ட் பண்ணியுள்ளார். இப்போதைய சூழலில் இப்படம் மிகவும் அவசியமானது. அனைவரும் ஆதரவு தாருங்கள்”.

டைரக்டர் ராம் சக்ரி, “அண்ணன் சமுத்திரக்கனியின் நண்பர் ஸ்ரீராம் மூலமாகத் தான் இப்படத்தின் ஸ்கிரிப்டை சமுத்திரக்கனி அண்ணனுக்கு அனுப்பினேன். அவர் மனதில் நினைத்த மாதிரியே இருந்ததால் உடனே ஒத்துக் கொண்டார். எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் எனத் தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கேன். கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பவர்கள், இப்படத்தைப் பார்த்து அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

சமுத்திரக்கனி, “நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில்  மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு. அப்படி இருப்பவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது.  பிரச்சனைகளோடு வாழ்பவன் பணக்காரன். ஆனால் செல்வந்தன் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்பவன். இதான் இந்த ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். உங்களை செல்வந்தனாக்கும் இந்த ‘கார்மேனி செல்வம்’. இ.எம்.ஐ. என்ற பெயரில் ஏகப்பட்ட சுமைகளை சுமக்காதீர்கள். அப்புறம் நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்துவிட்டு, நன்றாக கைவீசி நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்கள்”.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.