திமுக : எந்தெந்த சாதிக்கு எத்தனை தொகுதி? பிரத்யேக தகவல் !
2026- சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் 164 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். 23 சாதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பளித்திருக்கிறது, திமுக தலைமை.
1) வன்னியர் : கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் சாதியை சேர்ந்த 28 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 19 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்தமுறை 25 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் 7 பேர் புதுமுகம்.
2) கொங்கு வேளாள கவுண்டர்: கடந்தமுறை 24 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 10 பேர் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்தமுறை 25 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 10 பேர் புதுமுகம்.
3) நாயுடு : கடந்த முறை 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 10 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்தமுறை நாயுடு சாதிக்குள்ளேயே உட்பிரிவுகளான கம்மா/ பலிஜா உட்பட 14 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 4 பேர் புதுமுகம்.
4) பறையர் : கடந்த முறை 14 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அதில் 12 பேர் வெற்றி பெற்ற நிலையில், இந்தமுறை 13 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில், 6 பேர் புதுமுகம்.
5) முதலியார் : சென்றமுறை வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி 14 பேரில் 10 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்தமுறை 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2 பேர் புதுமுகம்.
6) கள்ளர் : கடந்த முறை 11 பேரில் 8 பேர் வெற்றி பெற்ற நிலையில், இந்தமுறை 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2 பேர் புதுமுகம்.
7) நாடார் : கடந்த முறை 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 6 பேர் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் புதுமுகம்.
8) தேவேந்திர குல வேளாளர் : சென்ற முறை 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் அனைவருமே வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 5 பேர் புதுமுகம்.
9) அகமுடையார் : இதே சாதியில் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்தமுறை 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு மூவருமே வென்ற நிலையில், இந்தமுறை 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2 பேர் புதுமுகம்.
10) மறவர் : கடந்த முறை 4 இல் 2 பேர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஒருவர் மட்டும் புதுமுகம்.
11) முத்தரையர் : கடந்தமுறை 5 இல் 4 பேர் வெற்றிபெற்ற நிலையில், இந்தமுறை 4 பேருக்கு வாய்ப்பு. இதில் 3 பேர் புதுமுகம் .
12 ) ரெட்டியார் : கடந்தமுறை, 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அனைவருமே வென்ற நிலையில், இந்தமுறை 4 பேர் போட்டியிடுகிறார்கள்.
13) ஒக்காலிகா கவுடா : கடந்த முறை 4 இல் 3 வென்ற நிலையில், இந்தமுறை மீண்டும் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 3 பேர் புதுமுகம்.
14) உடையார் : கடந்த முறை 4க்கு4 வென்ற நிலையில், இந்தமுறையும் 4 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. இதில் 3 பேர் புதுமுகம்.
15) இசை வேளாளர் : சென்ற முறை 3க்கு 3 வென்ற நிலையில், இந்த முறை 4 பேருக்கு வாய்ப்பு. இதில் ஒருவர் மட்டுமே புதுமுகம்.
16) துளுவ வேளாளர்/ பிள்ளைமார் : கடந்த முறை 3/1 வென்ற நிலையில், இந்தமுறை 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மட்டுமே புதுமுகம்.
17) அருந்ததியர் : சென்ற முறை 2/1 வென்ற நிலையில், இந்த முறை ஒன்று கூடுதலாக 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 2 பேர் புதுமுகம்.
18) செட்டியார் : கடந்த முறை 2/1 மட்டுமே வென்ற நிலையில், இந்தமுறையும் 2 நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், ஒருவர் மட்டுமே புதுமுகம்.
19) யாதவர் : சென்ற முறை 4/3 வென்ற நிலையில், இந்தமுறை 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
20) பழங்குடியினர் : சென்ற முறை இருவர் போட்டியிட்டு ஒருவர் வென்ற நிலையில், இந்த முறை மீண்டும் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இருவருமே புதுமுகம்.
21) படுகர் : கடந்தமுறை ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவரும் வென்ற நிலையில், இந்த முறை புதுமுகர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
22) மீனவர் : சென்ற முறை 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருவருமே வென்ற நிலையில், இந்த முறை ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
23) இஸ்லாமியர் : கடந்தமுறை 3 பேருக்கு வாய்ப்பு வழங்கி மூவருமே வென்ற நிலையில், இந்த முறை 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் புதுமுகம்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.