அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புதுச்சேரி – 2026 தேர்தல் கள நிலவரம் – அங்குசம் சர்வே !

திருச்சியில் அடகு நகையை விற்க

புதுச்சேரி – 2026 தேர்தல் கள நிலவரம் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு….? ஆட்சியைப் பிடிப்பது யார்?

  1. மண்ணாடிப்பட்டு

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பாஜக வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஆர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. தவெக பாரதிதாசன், நாம் தமிழர் ஓவியா வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

  1. திருபுவனை (தனி)

கடந்த 2021 தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அங்காளன் தற்போது திமுக வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவரை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கோபிகா போட்டியிடுகின்றார். அங்காளன் மற்றும் கோபிகா இடையே கடும்போட்டி நிலவுகின்றது. காங்கிரஸ், சிபிஎம் நாதக போட்டியிடுகின்றன. ஊசுடு தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஏ.கே.சாய் சரவணன் குமார் தற்போது தவெகவில் போட்டியிடுகின்றார். கடும் போட்டியில் திமுக வேட்பாளர் அங்களான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. ஊசுடு (தனி)

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்குகளில் வெற்றியைப் பறிகொடுத்த காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகின்றார். பாஜகவில் தீப்பாய்ந்தான், தவெகவில் சரகணபவா, நாதகவில் கௌரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகின்றது. காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. மங்கலம்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் ரெங்கசாமி போட்டியிடுகின்றார். சொந்த தொகுதியான தட்டாஞ்சாவடியிலும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் எஸ்.எஸ்.ரங்கன் போட்டியிடுகின்றார். பாமக, தவெக, நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் ரெங்கசாமிக்கும் திமுக வேட்பாளர் ரங்கனுக்கும் இடையே போட்டி நிலவுகின்றது. கடந்த 2021 தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல்வர் ரெங்கசாமி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. வில்லியனூர்

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா திமுக சார்பில் போட்டியிடுகின்றார். இவர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.இரவிக்குமார் போட்டியிடுகின்றார். தவெக, நாம்தமிழர் கட்சியின் சார்பிலும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் இடையே கடும்போட்டி நடைபெறுகின்றது.

திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. உழவர்கரை

2021 தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற எம்.சிவசங்கரன் தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி என்கிற நித்யானந்தம் போட்டியிடுகின்றார். தவெக, நாதக சார்பிலும் போட்டியிடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் புஷ்பலதா போட்டியிடுகின்றார். காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நித்யானந்தம் இடையே போட்டி நிலவுகின்றது.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.சிவசங்கரன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. கதிர்காமம்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.பி.ரமேஷ் போட்டியிடுகின்றார். திமுக சார்பில் ஏ.பி.ஆர்.வடிவேலு போட்டியிடுகின்றார். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். இங்கு தவெக சார்பில் ஜெயந்தி என்னும் பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். நாம்தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றது. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கடும்போட்டி நிலவுகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. இந்திரா நகர்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ஏ.கே.டி,ஆறுமுகம் போட்டியிடுகின்றார். இவர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் என்.ராஜகுமார் போட்டியிடுகின்றார். தவெக, நாம்தமிழர் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

9.தட்டாஞ்சாவடி

முதல் அமைச்சர் ரெங்கசாமியின் சொந்த தொகுதியாகும். கடந்தமுறை இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர். ஏனாம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இன்னாள் மக்களவை உறுப்பினர் வைத்தியலிஙகம் போட்டியிடுகின்றார். இருவருக்குமிடையே கடும்போட்டி நிலவுகின்றது. தவெகவோடு கூட்டணி அமைத்துள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிடுகின்றார். சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாதக மற்றும் சில கட்சிகள் போட்டியிடுகின்றன. சுயேட்சை வேட்பாளர் விநாயகம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பிரிப்பார் என்ற கருத்தும் நிலவுகின்றது.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. காமராஜ் நகர்

இந்தத் தொகுதியில் இலட்சிய ஜனநாயக கட்சியின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜக கூட்டணியில் போட்டியிடுகின்றார். இவர் மேலும் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.கே.தேவதாஸ் போட்டியிடுகின்றார். தவெக, நாதக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி.கே.தேவதாஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  1. இலாஸ்பேட்டை

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து போட்டியிடுகின்றார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.வைத்யநாதன் மீண்டும் போட்டியிடுகின்றார். தவெக சார்பில் நியமன சட்டமன்ற உறுப்பினர் வி.சாமிநாதன் போட்டியிடுகின்றார். சிபிஎம். நாதக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போட்டி என்பது என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேதான்.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.வைத்யநாதன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. காலாப்பட்டு

பாஜக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் பரூக் மரைக்காரையர் மகன் ஷாஜகான் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் ஷாஜகான் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். திமுக சார்பில் ஏ.செந்தில் (எ) ரமேஷ் போட்டியிடுகின்றார். நட்பு மோதல் நடைபெறுகின்றது. பாஜக, காங்கிரஸ் இடையே கடும்போட்டி என்றாலும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

பாஜக வேட்பாளர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. திமுக+காங்கிரஸ் நட்பு மோதல் தவிர்க்கப்பட்டிருந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பாக அமைந்திருக்கும்.

  1. முத்தியால்பேட்டை

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் வையாபுரி மணிகண்டன் போட்டியிடுகின்றன. 2016இல் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். 2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாஷ்குமாரிடம் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜி.ராஜேந்திரன் போட்டியிடுகின்றார். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் தவெகவில் இணைந்து அக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

என்.ஆர்.காங்கிரஸ்+காங்கிரஸ்+தவெக என்னும் கடுமையான மும்முனைப்போட்டியில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

  1. ராஜ்பவன்

பாஜக சார்பில் ஏ.ராமலிங்கம் போட்டியிடுகின்றார். 2021இல் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுக சார்பில் பி.விக்னேஷ் கண்ணன் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் கட்சியில் ஆர்.குமரன் போட்டியிடுகின்றார். இங்கேயும் நட்பு மோதல் நடைபெறுகின்றது. தவெக சார்பில் காவல்துறை முன்னாள் எஸ்.பி. வி.ஜெ.சந்திரன் போட்டியிடுகின்றார்.

கடுமையான மும்முனைப் போட்டியில் திமுக வேட்பாளர் பி.விக்னேஷ் கண்ணன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. உப்பளம்

பாஜக கூட்டணியில் புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அ.அன்பழகன் போட்டியிடுகின்றார். திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வி.அனிபால் கென்னடி போட்டியிடுகின்றார். தவெக, நாதக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்றாலும் திமுக – அதிமுக இடையே போட்டி நடைபெறுகின்றது.

கடுமையான போட்டியில் திமுக வேட்பாளர் வி.அனிபால் கென்னடி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. உருளையன்பேட்டை

அதிமுக சார்பில் ஏ.காந்தி போட்டியிடுகின்றார். திமுக சார்பில் எஸ்.கோபால் போட்டியிடுகின்றார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் ஜி.நேரு (எ) குப்புசாமியிடம் தோல்வி அடைந்தவர். தற்போதைய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தற்போது நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, தவெகவோடு கூட்டணி அமைத்து தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

கடுமையான மும்முனைப்போட்டியில் திமுக வேட்பாளர் எஸ்.கோபால் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. நெல்லித்தோப்பு

பாஜக சார்பில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடும் 2ஆவது தொகுதி. திமுக சார்பில் வே.கார்த்திகேயன் போட்டியிடுகின்றார். 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தவெக, நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக மற்றும் பாஜக கூட்டணியிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திமுக வேட்பாளர் வே.கார்த்திகேயன் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.

  1. முதலியார்பேட்டை

பாஜக சார்பில் ஏ.ஜான்குமார் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை இருந்தவர் 2021இல் காமராஜ் நகரில் வெற்றி பெற்றவர் தற்போது முதலியார் பேட்டையில் போட்டியிடுகின்றார். திமுகவின் சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எல்.சம்பத் போட்டியிடுகின்றார். தவெக, நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். போட்டி என்பது பாஜக திமுக இடையேதான் போட்டி.

கடுமையான போட்டியில் திமுக வேட்பாளர் எல்.சம்பத் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. அரியாங்குப்பம்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சி.ஐயப்பன் (எ) முத்தையன் போட்டியிடுகின்றார். 2021இல் என்.ஆர்.காங்கிரஸ் வென்ற தொகுதியாகும். இவர் இந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். காங்கிரஸ் சார்பில் ஜே.விஜயலட்சுமி போட்டியிடுகின்றார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயமூர்த்தியின் மகள். தவெகவில் போட்டியிடும் எஸ்.குமரவேலு தேமுதிக உட்பட பல கட்சிகளில் வேட்பாளராக நின்றவர். போட்டி என்பது என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் இடையேதான் போட்டி.

காங்கிரஸ் வேட்பாளர் ஜே.விஜயலட்சுமி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. மணவெளி

பாஜக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான ஏம்பலம் ஆர்.செல்வம் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் சார்பில் ஆர்.கே.ஆர். அனந்தராமன் போட்டியிடுகின்றார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தவெக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போட்டி பாஜக காங்கிரஸ் இடையேதான்.

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. ஏம்பலம் (தனி)

காங்கிரஸ் சார்பில் எம்.கந்தசாமி போட்டியிடுகின்றார். இவர் பலமுறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்துள்ளார். 2021 தேர்தலில் குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இ.மோகன்தாஸ் போட்டியிடுகின்றார். தவெக, நாதக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் எம்.கந்தசாமி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன.

  1. நெட்டபாக்கம்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பி.ராஜவேலு போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஜி.அன்பரசன் போட்டியிடுகின்றார். தவெக, நாதக சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அன்பரசன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. பாகூர்

திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.செந்தில்குமார் போட்டியிடுகின்றார். மிகக் குறைந்த வாக்குகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வெற்றி கொண்டார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் டி.தியாகராஜன் போட்டியிடுகின்றார். இவர் 2011இல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர். தவெக சார்பில் போட்டியிடும் என்.தனவேலு 2016இல் இந்தத் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். 2021 தேர்தலில் 200 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர். கடுமையான மும்முனைப்போட்டி நிலவுகின்றது.

திமுக வேட்பாளர் ஆர்.செந்தில்குமார் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. நெடுங்காடு

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா போட்டியிடுகின்றார். காங்கிரஸ் சார்பில் தினேஷ்குமார் போட்டியிடுகின்றார். தவெக, நாதக கட்சிகளும் போட்டியிடுகின்றன. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.

சட்டமன்ற தேர்தலில் 2ஆயிரம் வாக்குகளில் வெற்றிப் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 5ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ்குமார் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. திருநள்ளாறு

பாஜகவில் போட்டியிடும் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் 2021 தேர்தலில் 1300 வாக்குளில் சுயேட்சை வேட்பாளர் சிவாவிடம் தோல்வி அடைந்தவர். பின்னர் நியமன சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கமலகண்ணன் இதே தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவர். அமைச்சராவும் இருந்துள்ளார். தவெக சார்பில் சமூக ஆரவலர் ஏ.ராஜாமுகமது போட்டியிடுகின்றார். போட்டி காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேதான்.

கடுமையான போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கமலகண்ணன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. காரைக்கால் வடக்கு

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பி.ஆர்.என்.திருமுருகன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர். கடந்த தேர்தலில் 135 வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் கட்சியை வெற்றி கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.ரஞ்சித் போட்டியிடுகின்றார். தவெக, நாதக கட்சிகளும் களத்தில் உள்ளன. போட்டி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேதான்.

காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.ரஞ்சித் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. காரைக்கால் தெற்கு

காரைக்கால் பகுதியில் பாஜகவின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய எம்.அருள் முருகன் போட்டியிடுகின்றார். திமுக சார்பில் ஏ.எம்.எச்.நாஜிம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் போட்டியிடுகின்றார். கடந்த 2021தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கே.ஏ.யு.அசனா தற்போது தவெக சார்பில் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் சக்திவேல் பிரபு போட்டியிடுகின்றார். இவர் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. திமுக-பாஜக-தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. நிரவி – டிஆர் பட்டினம்

திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எம்.நாகதியாகராஜன் போட்டியிடுகின்றார். பாஜக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் மீண்டும் போட்டியிடுகின்றார். தவெக, நாதக கட்சிகளும் களத்தில் உள்ளன. பாஜக – திமுக இடையே கடும்போட்டி நிலவுகின்றது.

திமுக வேட்பாளர் எம்.நாகதியாகராஜன் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. கேரளம் – மாஹே

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்பரம்பத் மீண்டும் போட்டியிடுகின்றார். பாஜக சார்பில் டி.அசோக் குமார் போட்டியிடுகின்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது சமீல் போட்டியிடுகின்றார். தவெக, நாதக கட்சிகளும் போட்டியிடுகின்றன. போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான்.

கடுமையான மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்பரம்பத் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  1. ஆந்திரம் – ஏனாம்

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணராவ் போட்டியிடுகின்றார். 1996 முதல் 2016 வரை தொடர்ந்து வெற்றி பெற்றவர். அமைச்சராகவும் இருந்தவர். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி போட்டியிட்டதால் மல்லாடி கிருஷ்ணராவி போட்டியிடவில்லை. ஆனாலும் தற்போதைய முதல்வர் ரெங்கசாமி தோல்வி அடைந்த தொகுதியாகும்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2021 தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் போட்டியிடுகின்றார். தவெக, நாதக கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக+என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் 22ஆயிரம் வாக்குள் பெற்றது. இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவுகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மல்லாடி கிருஷ்ணராவ் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

வெற்றி வாய்ப்பு உள்ள கட்சிகளின் தொகுதிகள் விவரங்கள்

காங்கிரஸ் – 13

திமுக – 11

என்.ஆர்.காங்கிரஸ் – 5

பாஜக – 1

காங்கிரஸ் 5 தொகுதிகளில் திமுக+விசிகவோடு நட்பு முறையில் போட்டியிடுகின்றது. இங்கே கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகின்றது. இதனால் சில சுயேட்சைகள், தவெக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. இங்கே கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

 

அங்குசம் செய்தி குழு.. 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.