வாகன சோதனையில் சிக்கிய போலி 500 ரூபாய் நோட்டுகள் ! சுற்றி வளைத்த காவல்துறை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சரகம், கரூர் to ஈரோடு ரோடு, புன்னம் பிரிவு என்ற இடத்தில் 05.04.2026 ஆம் தேதி மாலை 17.00 மணியளவில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த Bolero கார் திடீரென்று வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்ற போது மேற்படி காரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அதிலிருந்து எதிரிகள் 1) சுந்தரமூர்த்தி, 56/26, த/பெ வெங்கடேசன், 2) பாலகிருஷ்ணன், 25/26, த/பெ பாலதண்டபாணி 3) ஜெயச்சந்திரன், 38/26, த/பெ வரதராஜன் ஆகியோர்கள் மேலும் கீழும் 500 ரூபாய் அசல் நோட்டுகளுக்கு மத்தியில் கலர் ஜெராக்ஸ் பேப்பர் வைத்த போலி நோட்டுகள் வைத்த கட்டுக்கள் 03 வைத்திருந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை செய்தபோது, போலிநோட்டுக்களை வைத்து பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போலி ரூபாய் நோட்டுக்கள்
போலி ரூபாய் நோட்டுக்கள்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மேலும் மேற்படி எதிரிகளை பற்றி விசாரணை செய்தபோது 1வது எதிரி சுந்தரமூர்த்தி என்பவருக்கு மதுரை, கரூர், கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும், 2வது எதிரி பாலகிருஷ்ணன் என்பவருக்கு கரூர், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திலும், 3வது எதிரி ஜெயச்சந்திரன் என்பவருக்கு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் மற்றும் திருப்பூர் மாநகரத்திலும் முன்வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.