அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேங்கூர், அரசங்குடி,  முறுக்கூர், நடராஜபுரம் , தொண்டமான்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்ற நிலையில், உற்சாகமடைந்த அவரும் மாணவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றி மக்களைக் கவர்ந்தார்.

உதவித்தொகை உயர்வு:

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வாக்கு சேகாிப்பில்...காலை உணவுத் திட்டம்:

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தற்போது தொடக்கப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம், 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

வேங்கூர் வளர்ச்சி:

2026 June 11 - 17 Angusam Book

கடந்த 2021 முதல் வேங்கூர் பகுதியில் சுமார் ரூ. 3.80 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்கு சேகாிப்பில்...சமூக நலத்திட்டங்கள்:

விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வெற்றி இலக்கு:

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி   மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.