தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை அல்ல ! எங்கள் குடும்பத்தின் கோயில் ! – கண் கலங்க வைத்த ஆட்டோ ஓட்டுநர் !
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்-23 அன்று நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் இறுதிகட்ட பரப்புரை ஏப்ரல்-21 மாலை 6 மணியுடன் நிறைவடைந்தன. ஏப்ரல் 21 அன்று மண்ணச்சநல்லூர் தொகுதியில் தனது கடைசிகட்ட பிரச்சாரத்தை அத்தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் எம்.எல்.ஏ. எஸ்.கதிரவன் தனது மனைவி அனந்தலட்சுமி கதிரவனுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கண்கலங்கும் வகையில் உருக்கமாகவும், நெகிழ்ச்சியோடும் வாக்காளர்களிடையே உரையாடிய அவர், “உங்கள் கஷ்டத்தையும், உங்கள் நம்பிக்கையையும் உணர்ந்தவன். மண்ணச்சநல்லூர் எனக்கு ஒரு தொகுதி மட்டுமின்றி, இது என் குடும்பமாக கருதுகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், உங்கள் வீட்டில் ஒருவராக இருந்து வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் சொன்ன ஒவ்வொரு குறையையும், கேட்ட ஒவ்வொரு கோரிக்கையையும் – எல்லாம் எனது பொறுப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட்டேன்.
இந்த காலத்தில் நாம் என்ன செய்தோம் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும். கிராமங்கள் தோறும், சாலைகள் இல்லாத இடங்களில் சாலை அமைத்தேன், குடிநீர் தட்டுப்பாடு இருந்த பகுதிகளில் நிரந்தர தீர்வு கண்டேன், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் பஸ் வசதியை ஏற்படுத்தினோம். இன்னும் பல கிராமங்களுக்கு அந்த வசதியை வரும் நாட்களில் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளேன். இவையெல்லாம் இவை சாதாரண பணிகள் இல்லை, இது உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திய மாற்றங்கள்.
மண்ணச்சநல்லுார் தொகுதியைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் மக்களுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான இலவச மருத்துவ சேவைகளை அளித்துள்ளேன். இது ஒரு சாதனை மட்டுமல்ல, உங்கள் குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கு நான் கொடுத்த உறுதி.
கல்வியில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் — அவர்கள் கனவுகள் உடையாமல் இருக்க, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு மாணவன் உயர்ந்தால், ஒரு குடும்பம் உயர்கிறது… ஒரு குடும்பம் உயர்ந்தால், நமது சமூகம் முன்னேறுகிறது.
இதோடு மட்டுமின்றி, சா.கண்ணனூர் பேரூராட்சியில் மட்டும் ரூ.45.81 கோடியில் சாலை, பாலம், குடிநீர், கழிப்பிடம், பள்ளிக்கட்டிடம் என 227 வளர்ச்சி திட்டப்பணிகள் கடந்த 5 ஆண்டு காலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வளர்ச்சி மட்டும் அல்ல, இது நம் ஊரின் முகத்தை மாற்றிய வளர்ச்சியியல் மாற்றம்.
இதேபோன்று, பூனாம்பாளையத்தில் ரூ.5.46 கோடியிலும்,
ராசாம்பாளையத்தில் ரூ.2.45 கோடியிலும், வடக்கிப்பட்டியில் ரூ.ரூ.50 லட்சத்திலும் அடிப்படை வசதிகளை நான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில், உங்கள் எம்எல்ஏவாக இருந்து நான் செய்த பணிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்… அனுபவித்திருக்கிறீர்கள்… அதனால் தான் இன்று நான் உங்களிடம் தலை நிமிர்ந்து நிற்கிறேன். மீண்டும் ஒரு முறை தைரியமாக வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன்.
இன்று நான் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறேன், அதிகாரம் வேண்டி அல்ல, மண்ணச்சநல்லுார் மக்களுகு்கு இன்னும் அதிகம் சேவை செய்வதற்காக கேட்கிறேன்.
நாம் தொடங்கிய வளர்ச்சிப் பாதையை நிறுத்தாமல், அதை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மண்ணச்சநல்லூரை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவதற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான வாய்ப்புகளை நீங்கள் தான் வழங்க வேண்டும். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். எனக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு, மக்களின் நம்பிக்கைக்கான ஓட்டு, உங்கள் குடும்பத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான ஓட்டு. நாம் ஒன்றாக இருந்தால், மண்ணச்சநல்லூர் இன்னும் உயரத்தை அடையலாம்.” என்பதாக உருக்கமான உரையாற்றினார்.
அப்போது, அவரது தேர்தல் பரப்புரையை கேட்க திரண்டிருந்த தொகுதி மக்களை நோக்கி, “தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்றுள்ளீர்களா? சிகிச்சை எவ்வாறு உள்ளது” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் குழந்தை என்பவர், ”ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் விபத்தில் சிக்கி உங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்து எனது உயிரை காப்பாற்றினார்கள். சர்க்கரை அளவும் அதிகமாகி விட்டது. மாதம் ஒருமுறை அட்மிட் ஆகி சிகிச்சை பெறுகிறேன். இதுவரை சுமார் 7 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை அத்தனையும் இலவச உணவுடன் இலவசமாக கிடைத்தது. அதே போல் எனது பேரனுக்கு விளையாடும் போது உயிர் நாடியில் அடிபட்டு கவனிக்காமல் விட்டதால், சீல் வைத்துவிட்டது. உங்கள் மருத்துவமனையில் நவீன கருவிகள் மூலம் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து என் பேரனின் உயிரை காப்பாற்றினார்கள். அது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை அல்ல, ‘எங்கள் குடும்பத்திற்கு அது ஒரு கோயில்’ என கண்ணீர் சிந்திக் கொண்டே கூற எம்.எல்.ஏ. கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வர பிரச்சாரக் களமே நிசப்தமானது.
முன்னதாக, எம்.எல்.ஏ. கதிரவனின் மனைவி அனந்தலட்சுமி கதிரவன் பேசும்போது, “அவர் சொந்த வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதை விட, தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டதே அதிகம். எப்போதும் தொகுதி மக்களுக்கு என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்பதை மட்டுமே அதிகம் சிந்திப்பார். மண்ணச்சநல்லூரை தமிழகத்திலேயே ஒரு முன் மாதிரியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
எனவே, மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் நமது தொகுதி முன்னேற, எல்லா வகைகளிலும் வளம் பெற கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு” வேண்டுகோள் விடுத்தார். கோடை வெயிலுக்கு மத்தியில் சூறாவளிப்பிரச்சாரம் செய்து தொகுதி முழுக்க வலம் வந்திருந்தாலும், இறுதி நாளில் நடைபெற்ற இந்த பரப்புரை நெகிழ்வில் ஆழ்த்தியது.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.