அங்குசம் பார்வையில் ‘பிரேக்ஃபாஸ்ட்’
தயாரிப்பு: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் கிரிஜா வரதராஜன், டைரக்டர்: ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, ஆர்டிஸ்ட்: ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத், கஸ்தூரி, ‘வீடு’ அர்ச்சனா, ரவி மரியா, ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: எஸ்.பாஸ்கர்& சுஜித், ஆர்ட் டைரக்டர்: ஆர்.கே.நாகு, பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா& ஏ.அப்துல்நாசர்.
‘சாட்’ல லவ் பண்ணி சடக்குன்னு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள் கிருத்திக் மோகனும் அமிதா ரங்கநாத்தும். ஆனா ஒரே மாசத்துல லவ் அந்துக்கிட்டதால டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போகிறார்கள். மனநல மருத்துவர் கஸ்தூரி கிட்ட கவுன்சிலிங் போயி சர்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொல்றாரு ஜட்ஜ் வினோதினி வைத்தியநாதன். ரெண்டு பேரும் கஸ்தூரிகிட்ட போனா…. கஸ்தூரி ஒரு கதை சொல்றாரு… அதாவது சென்ஸார் போர்டுல மெம்பரா இருக்காராம் கஸ்தூரி.
தான் பார்த்த ஒரு படத்தின் லவ் ஸ்டோரியை யும் அதில் வரும் ராணவ் – ரோஸ்மின் லவ் ஜோடியைப் பற்றியும் கதைவிட ஆரம்பிக்கிறார். நிஜ ஜோடிகளான கிருத்திக் மோகனுக்கும் அமித் ரங்கநாதனுக்கும் டைவர்ஸ் கிடைச்சுதா? இல்ல ஒண்ணு சேர்ந்தார்களா? இதான் இந்த ‘பிரேக் ஃபாஸ்ட்’.
சங்க கால காதல், 80- களின் காதல்,90- களின் காதல், இதெல்லாம் எப்படி இருந்துச்சு தெரியுமா? ஆனா இப்பவுள்ள டிஜிட்டல் காதல்னு…. நல்லாத்தான் ஆரம்பிச்சாரு காந்தி கிருஷ்ணா…. இதெல்லாமே அஞ்சு நிமிஷம் தான். அதுக்குப் பிறகு இரண்டேகால் மணி நேரம்….? அந்த கொடுமைய நாம எப்படி சொல்றதுன்னே தெரியல. ஏன்னா ஸ்கிரிப்ட்டை எப்படி கொண்டு போறது? சீன்களை எப்படி எக்ஸ்கியூட் பண்றதுன்னு தெரியாம க்ளைமாக்ஸ் வரை தடுமாறி நம்மளை ரொம்பவும் கிறுகிறுக்க வச்சுட்டாரு டைரக்டர் காந்தி கிருஷ்ணா. கஸ்தூரி சொல்லும் ராணவ் – ரோஸ்மின் ஜோடி யாருங்கிறதுக்கு க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு பாருங்க….. வெலவெலத்துப் போய்ட்டோம்… ஹீரோ ராணவ்லாம் ரொம்ப கஷ்டம்.
ஒரு சீன் கூட ரசிக்க முடியலயே பிரதர். ஹீரோயின் ரோஸ் மின்னும் அதே ரகம் தான். பிஸ்கட் கம்பெனி ஓனர் சம்பத் ராஜ் மகளாம்…குப்பை அள்ளும் தொழிலாளியான ராணவ்வை லவ் பண்ணி கல்யாணம் பண்றாராம்… அப்புறம் அத்துவிடுறாராம்…வீட்டையே தீ வைத்து கொளுத்துறாராம்… இதுக்கிடையில ராணவ்வின் அப்பாவுக்கு கிட்னி ஃபெயிலியராம். திடீரென சாகுறாராம்…. அம்மா அர்ச்சனா கதிகலங்கி நிக்கிறாராம்… ஸ்ஸ்ஸ்…..ஸப்பா முடியலடா சாமீ…..இசை – ஜி.வி.பிரகாஷ்னு டைட்டிலில் போட்டாய்ங்க. அப்படியா பிரதர்? காந்தி காலத்து சினிமாவிலிருந்து இன்னும் வெளியே வரல இந்த காந்தி கிருஷ்ணா…
அங்குசம் பார்வையில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ 30/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.