அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஓடிடியின் லாப டெக்னிக் ! ‘வாரண்ட்’ தயாரிப்பாளர் ஸ்டேட்மெண்ட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

‘சிவன் பிக்சர்ஸ்’ & ‘எஸ் ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஸ்வர் இணைந்து தயாரித்து ஜி-5 ஓடிடியில் வருகிற 22—ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘வாரண்ட்’ என்ற வெப் சீரிஸ். க்ரைம் த்ரில்லர் ஜானரிலான இந்த சீரிஸின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கதையையும் எழுதியுள்ளார் ‘விலங்கு’ வெப்சீரிஸ், சூரியின் ‘மாமன்’ படங்களின் இயக்குனரான பிரசாந்த் பாண்டியராஜ். இந்த ‘வாரண்ட்’ சீரிஸை விக்னேஷ் நடராஜன் டைரக்ட் பண்ணியுள்ளார்.

‘வாரண்ட்’ சீரிஸ்பிரசாந்த் பாண்டியராஜுடன் அருள்தாஸ், சாயாதேவி, மீனா, கெளசல்யா வையாபுரி, அருள்ஜோதி உட்பட பலர் நடித்துள்ளனர். மே 22-ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆவதையொட்டி, மே.09-ஆம் தேதி சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன், தயாரிப்பாளர்கள் ‘லார்க் ஸ்டுடியோ’ குமார், சினிஷ், ஹீரோ கவின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

முதலில் நடிகைகள் கெளசல்யா, மீனா, சாயாதேவி, நடிகர்கள் அருள்தாஸ், வையாபுரி, அருள்ஜோதி ஆகியோர் இந்த சீரிஸின் சிறப்பு குறித்தும் அதில் தங்களின் பங்களிப்பு குறித்தும் சுருக்கமாகப் பேசினார்கள். அடுத்துப் பேசியவர்கள்…

‘வாரண்ட்’ சீரிஸ்ஜி-5-ன் தலைமை அதிகாரி ஷாம், “எங்கள் பிளாட்பார்மில் மாதம் ஒரு சீரிஸ் என பிளான் பண்ணிச் செயல்பட்டு வருகிறோம். எங்களின் விலங்கு சீரிஸுக்கு மீடியாக்களும் மக்களும் கொடுத்த ஆதரவால் பெருவெற்றி பெற்றுள்ளது. அதன் இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் ஒரு போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே இந்த ‘வாரண்ட்’. பிரசாந்த் பாண்டியராஜை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி”

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

டைரக்டர் பாண்டிராஜ், “என்னோட சிஷ்யன் டைரக்டராகி, இப்ப ஹீரோவாகவும் வளர்ந்ததை நினைச்சா பெருமையா இருக்கு. நான் எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுக்கிட்டே இருப்பான். அவ்வளவு பொறுமைசாலி, அதே சமயம் நல்ல திறமைசாலி. அவனுக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் அஞ்சு வருசத்துல எம்.எல்.ஏ.ஆனாலும் ஆகிருவான்”

ஹீரோ கவின், “இந்த சீரிஸின் டிரெய்லரை பாண்டியராஜ் காண்பித்த போது இது படம்னு தான் நினைச்சேன். அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. பாண்டியராஜ் ப்ரோ அடுத்து சினிமாவிலும் ஹீரோவாகணும். இந்த விழாவுக்கு இன்விடேஷன் அனுப்புறேன்னு சொன்னார். அதெல்லாம் வேணாம், நான் கண்டிப்பா வந்துரேன்னு சொன்னேன்.  நானெல்லாம் கல்யாணத்துக்கே இன்விடேஷன் அனுப்பாத ஆளு”

‘வாரண்ட்’ சீரிஸ்டைரக்டர் விக்னேஷ் நடராஜன்,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“எனது குரு பாண்டிராஜ் சாரிடம் ‘கதகளி’ படத்துல வேலை பார்த்தேன். நான் படம் பண்ணுவேன்னு நம்புனது எனது பெற்றோர்களும் நண்பன் பிரசாந்தும் தான். நானும் அவனும் சேர்ந்து தான் இந்தக் கதையை எழுதினோம். இதில் அவனை கட்டாயப்படுத்தித் தான் நடிக்க வைத்தேன். எங்களுக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மதன் சாருக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்’.

பிரசாந்த் பாண்டியராஜ்,

“புரூஸ்லி’ படத்திற்குப் பிறகு எந்த சான்ஸும் இல்லாமல் இருந்த நேரத்தில் ‘விலங்கு’ சீரிஸ் வாய்ப்பைக் கொடுத்தார் மதன் சார். ஜி-5யும் அதற்கு சப்போர்ட்டாக இருந்தது. மீடியாக்களின் பேராதரவால் மக்களிடம் அது சென்று சேர்ந்து ஹிட்டானது. கடவுளுக்கு அடுத்து நான் நம்புவது மீடியாக்களைத் தான். அதே மதன் சார், அதே ஜி-5 ஆதரவுடன் இந்த சீரிஸில் நடிகராக மாறியுள்ளேன். இதற்கும் மீடியாகளும் மக்களும் நல்ல ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்”.

தயாரிப்பாளர் மதன்,தயாரிப்பாளர் மதன்,

“இது எங்களுக்கு நாலாவது வெப் சீரிஸ். சினிமா எடுப்பதைவிட ரொம்பவும் ரிஸ்கானது சீரிஸ் எடுப்பது. ஏன்னா திடீர்னு பட்ஜெட் எகிறும். இந்த சீரிஸுக்கும் லட்சங்களில் அல்ல கோடிகளில் பட்ஜெட் எகிறியது. ஆனாலும் படைப்பின் மீதுள்ள காதலால் இதை செய்து முடித்தோம். நல்ல கதைகளுக்கு ஓடிடி தளங்களும் ஆதரவாக இருக்க வேண்டும். ஏன்னா ஐஎம்பிடி ரேட்டிங் ஏற ஏற லாபம் மொத்தமும் அவர்களுக்குத் தான். அதனால் தயாரிப்பாளர்களை அவர்கள் கைதூக்கிவிட வேண்டும். இதை குறையாகச் சொல்லவில்லை, செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சொன்னேன்”.

 

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.