ஆதவ் அர்ஜுனா மதச்சார்பின்மை குறித்து ரொம்பவும் சிலிர்த்துக் கொள்கிறார்.

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஆதவ் அர்ஜுனா மதச்சார்பின்மை குறித்து ரொம்பவும் சிலிர்த்துக் கொள்கிறார்.

அவரது கட்சியின் மதச்சார்பின்மைக்குச் சில சாம்பிள்கள்:

இந்த வார அங்குசம் வார இதழில்…

1) கரூர் அப்பாவி மக்களை நெரிசலில் கும்பலாய்க் காவு வாங்கியது குறித்து விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டவுடன் மதச்சார்பற்ற ஒன்றிய அரசின் குழு ஹேமமாலினி தலைமையில் வந்து விஜய் கும்பலைப் பாதுகாத்துச் சான்றிதழ் அளித்துப் போனது.

2) விஜய் அமைச்சரவையில் ஒருவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் மதச்சார்பற்ற கட்சியான பாஜகவின் I.T. Wing செயலாளர். ஹத்ராஸ் வழக்கின் பாலியல் வல்லுறவாளர்களுக்கு ஆதரவாக அந்நாளில் இவர் மிகத் தீவிரமாகக் களமாடியது தமிழ்நாடு முழுவதும் பிரசித்தம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

3) தவெகவின் பொருளாளராகவும் கல்வி அமைச்சராகவும் இருப்பவர் வெங்கட் ரமணன். பார்ப்பனீய எதிர்ப்பு ஒரு வழக்கொழிந்து போன கருத்தியல் என கொக்கரித்த பார்ப்பனர் இவர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

4) சிவகாசி தொகுதியில் வென்று அமைச்சரானவர் கீர்த்தனா. மோடிக்கு ஆதரவாகத் தீவிரமாகக் கருத்தாடல் செய்து தமிழ்நாட்டு மக்களின் கவனம் ஈர்த்தவர்.

5)அருண் ராஜ் என்பவர் இன்னொரு அமைச்சர். ஒன்றிய அரசின் வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாய் இருந்து விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியவர். ரெய்டைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் ஒன்றாக இப்போது அமைச்சராகி இருக்கிறார். ரேவ்டி கல்ச்சர் என்று இலவசங்களுக்கு எதிராக மோடி முன்வைத்த கருத்தைத் தன் தலைமேல் கொண்டு பரப்பி வருபவர் இவர்.

6) செங்கோட்டையன். 96இல் நடந்த வருமான வரித்துறை ரெய்டைத் தொடர்ந்து வெறும் வாய்க்கால்களைப் பண வாய்க்கால்களாக மாற்றி ஓடவிட்டவர். வாச்சாத்தி பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்தவர்களின் சூத்திரதாரி இவர். அண்மையில் பிஜேபிக்கு ஆதரவாக அதிமுகவில் கலவரம் செய்துவிட்டு, அவர்கள் சொற்படி தவெகவில் வந்து கரை ஒதுங்கியவர்.

இந்த மதச்சார்பின்மை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

– மணி மதிவண்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.