அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தொடங்கி வைத்தனர்.

திருச்சி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோயில் தான்.இந்த கோவிலில் நடுப்பகுதியில் தெப்பக்குளம் அமைந்துள்ளது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில் கடந்த சில வருட காலமாக தெப்பக்குளம் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட அசுத்த பொருட்களால் நிரம்பி காட்சியளித்தது.மேலும் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் பல காணப்பட்டதால் தெப்பக்குளம் அழகு தெரியாமல் மறைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கம் நிறுவனர்  வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி மதுரை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை தூர் வார வேண்டும் என்றும்,தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றி பொதுமக்கள், பக்தர்கள் சென்று வர வசதி தர வேண்டும் என்று வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமப்புகளை உடனடியாக அகற்றிதெப்பக்குளத்தை தூர் வார வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார் இந்த தீர்ப்பை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துதெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள் இதனால் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் என் எஸ் பி ரோடு அகலமானது. மேலும் தெப்பக்குளத்தை புது பொலிவு பெற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முன் வந்தது இதையடுத்து மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி ரோடு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீர் முழுவதும் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தாயினும் நனிசிறந்த திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா்! – முன்னூர் ரமேஷ்  பக்கங்கள்இக்குளம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும். இக்குளத்தின் மொத்தப் பரப்பளவு 20984 சதுர மீட்டர் ஆகும். இக்குளத்தின் ஆழம் 3.50 மீட்டர் ஆகும். கொள்ளளவு 73.444 கன.மீட்டர். தூர்வாரும் பணி ரூ.25.00 லட்சம் உத்தேச மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு பின்பு தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் நடைபாதை அமைத்து, பூங்கா அமைத்து அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு மதிப்பீடு மாநகராட்சி மூலம் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலம் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தொடங்கி வைத்தார். நிகழ்வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க நிகழ்வுக்கு பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ. கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மங்கள அண்ட் மங்கள் உரிமையாளர் மூக்கப் பிள்ளை, ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ்,மாநில இணைச்செயலாளர் தீபக் ராஜா, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், திருச்சி மாநகர செயலாளர் வி.பி. ஆறுமுகப்பெருமாள்,பொருளாளர் ஜானகிராமன், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம், திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ். மைதீன், திருச்சி மாநகர இளைஞரணி செயலாளர் திருமாவளவன், டோல்கேட் ப.ரமேஷ், மாநகராட்சி உதவி ஆணையர் சசிகலா,உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர் மதன் குமார், மலைக்கோட்டை கோவில்அறங்காவலர் குழுத் தலைவர் சீனிவாசன், அறங்காவலர் ஸ்ரீதர்தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன், மாவட்ட நிர்வாகி ஜெயராஜ், வேதாத்திரி நகர் பாலு, வட்ட செயலாளர் வினோத்குமார், ஜெ.சக்திவேல்,, செந்தில் குமார், ரவிசங்கர், தனசேகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.