‘ஆட்டி’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ் இனத்தில் பெண்களே முதலானவர்கள், முதன்மையானவர்கள். பழந்தமிழர் வரலாற்றில் தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் போராடிப் பெற்ற வெற்றி, அதில் ஏற்பட்ட பிரச்சனைகள், பெண்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம், இதையெல்லாம் மையப்படுத்தி இசக்கி கார்வண்ணன் தயாரித்து, கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ள படம் ‘ஆட்டி’.

இதில் ‘அயலி’ அபிநட்சத்திரா, காதல் சுகுமார், செளந்தர், பிரவீன் பழனிச்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று [ ஜூன்.05] ரிலீசாவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘ஆட்டி’ இப்போது ஜூன்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘ஆட்டி’ காரணம் மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீசான சூர்யாவின் ‘கருப்பு’, இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீசான ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஆகிய இருபடங்களும் தியேட்டர்களில் இப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் ‘ஆட்டி’யின் தியேட்டர் ரிலீஸ் ரைட்சை வாங்கியுள்ள ‘வி ஹவுஸ்’ சுரேஷ் காமாட்சி, வினியோகஸ்தர்களுடனும் தியேட்டர் ஓனர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்களின் ஆலோசனைப்படி ஜூன்.12-ஆம் தேதி ‘ஆட்டி’ ரிலீஸை மாற்றியுள்ளார்கள் இசக்கி கார்வண்ணனும் சுரேஷ் காமாட்சியும்.

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.