திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய நிர்வாகி ஜெயராமன் !
மண்ணச்சநல்லூர் சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியம் எதுமலை, ஓமாந்தூர், திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் கதிரவனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
1989 முதல் 2016 வரை எதுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக ஒன்றிய பொருளாளர், ஒன்றிய கவுன்சிலர், மாநில பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் என பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்த ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் அமுதா, அதிமுக கிளை மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்த கே.ஆர்.டி.ராமமூர்த்தி மற்றும் இளையராஜா, வாழையூர் ராஜேந்திரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் நேற்று இணைந்தனர்.
இந்நிகழ்வில், மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் எம்.எல்.ஏ, மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.