‘ஆல் பாஸ்’ விழாவில் அதகளம் பண்ணிய மன்சூரலிகான்! வெறுப்பேற்றிய வினோதினி!
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் பேனரில் மோகனா. ஆர் தயாரித்துள்ள படம் ‘ஆல் பாஸ்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ ஜனனி, கதாநாயகியாக நடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்ட டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளரையும் டைரக்டரை மும் வாழ்த்தி சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பினார்கள். மன்சூரலிகானோ கருப்பு படத்தில் அவர் டான்ஸ் ஆயிரத்தை நீக்கியதையும் அவர் மகன் கஞ்சா குடிக்கி என மீடியாக்கள் எழுதுவதையும் வீராவேசமாக பேசி அதகளம் பண்ணினார். படத்தில் நடித்துள்ள வினோதினி வைத்தியநாதனோ அரை மணி நேரம் நீண்ட சொற்பழிவாற்றி மீடியாக்களை வெறுப்பேற்றினார்.
அதன் பிறகு பேசியவர்கள்…
தயாரிப்பாளர் மோகனா
“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லோர் முன்பு நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது.

நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்ல ஆதரவு தர வேண்டும்”.
இயக்குநர் மைதீன்
“இந்தப்படத்தில் துஷ்யந்தை நடிக்க வைக்க அணுகியபோது, எனது அப்பா தான் சொல்வார் என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் துஷ்யந்தின் அப்பா என்பது தெரியாது. ஜெயப்பிரகாஷ் சாரை சந்தித்து முழுக் கதையை சொன்னேன்.
கதையைக் கேட்டு அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள் என்று கேட்டார். நான் உங்களைக் கூட நினைத்தி ருந்தேன், ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும் என்றேன். ஆனால் சம்பளம் ஒரு விஷயமே இல்லை நான் நடிக்கிறேன் என்று வந்தார்.
ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் தயங்கத்துடன் தான் சென்றேன். கதை பிடித்தால் தான் சொல்வேன் என்றார். கதை படித்துவிட்டு இதை அப்படியே எடுத்து விடுவீர்களா? என்றார். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றேன் அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன் என்று சொன்னார்.
இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும்”.
ஹீரோ துஷ்யந்த்
” வெட்டு குத்து ரத்தம், இருட்டான ஏரியா இல்லாத வட சென்னைப் படம் இது. அந்த மக்களிடமும் அன்பு, மனிதநேயம், பிறருக்கு உதவும் மனசு இருக்கு என்பதைப் பதிவு செய்துள்ள படம் இது. இந்த ஆல்பாஸ் சக்ஸஸுக்காக காத்திருக்கேன்”.
ஜேம்ஸ் வசந்தன்
“நான் எல்லா படத்தையும் மனதுக்கு நெருக்கமாக பார்ப்பேன், அப்படி சில படங்களை பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப்படம் பார்க்கும் போது உங்களுக்கு இப்படி எந்த கேள்வியும் தோன்றாது. மன அமைதி கிடைக்கும் இயக்குநர் வடசென்னையை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியுள்ளார்”.
இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரத் லோகித் ஷவா வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவு: தில் ராஜு எடிட்டிங்: எஸ்.பாஸ்கர் கலை இயக்குநர் :ஜெயசீலன். நடனம் : ஐ. ராதிகா, சண்டைப் பயிற்சி: ‘மெட்ரோ’ மகேஷ் மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.