ஆம்புலன்ஸ் டிரைவருக்கு இவ்வளவு சம்பளமா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் 54,000 சம்பளம் வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. இருளாண்டி கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள். இரவு, பகல், மழை, வெயில், பண்டிகை, விடுமுறை என எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மு. இருளாண்டி
மு. இருளாண்டி

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில், “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு சம்பளம் வழங்கப்படவில்லை” என்ற பொருளில் அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால், இந்த சம்பளம் 19 ஆண்டுகளாக இந்த சேவையில் தொடர்ந்து பணியாற்றி வரும் மிகக் குறைந்த 300 என்ற எண்ணிக்கையிலான மூத்த தொழிலாளர்கள் மட்டுமே இந்த சம்பளத்தைப் பெறுகின்றனர்.

ஆனால், இன்று புதிதாக 108 ஆம்புலன்ஸ் பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.21,000 மட்டுமே சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், “பணியின்போது விபத்து ஏற்பட்டு தொழிலாளர் உடல் உறுப்புகளை இழந்தாலும் அல்லது உடல் ஊனமடைந்தாலும், அவர்களுக்கு மாற்றுப் பணி அல்லது உரிய மறுவாழ்வு ஏற்பாடுகள் போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை. அவரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் உரிய கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிவாரணம் மற்றும் நீண்டகால பாதுகாப்பு கிடைக்காத நிலையும் உள்ளது.” என்பதாகவும் வேதனையை வெளிப்படுத்துகிறார், மு. இருளாண்டி.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.