அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமுதன் கொலையில் அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக்களவாணிகள்: எவிடன்ஸ் கதிர் சாடல்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில்  3ம்ஆண்டு பயின்று வந்த 19 வயது மாணவன் அமுதன் கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட மதுபோதைகள் பயன்படுத்துவது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தான் என்ற காரணத்திற்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து எவிடன்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் படுகொலை செய்யப்பட்ட அமுதனின் தந்தை கென்னடி மற்றும் தாயார் சுமதி ஆகியோரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து களஆய்வு மேற்க்கொண்டார்கள். ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில்  மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அமுதனின் பெற்றோர்கள் கென்னடி மற்றும் சுமதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் …

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில் …

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமான முறையில கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கும்பல் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவ்வழக்கை தமிழக அரசும் கல்லூரி நிர்வாகமும் திசை திருப்ப பார்க்கிறது. கல்லூரி சமையல்காரரை அமுதன் தாக்கவில்லை உடன் இருந்த அஜீஸ் எனும் மாணவர்தான் சமையலரை தாக்கி உள்ளார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கல்லூரி நிர்வாகத்திடம் அமுதன் கஞ்சா விற்பனை செய்பவர்களின் பெயர் பட்டியலை கூறியுள்ளது. கோஷ்டி மோதல் என்றால் அமுதன் உடன் சென்ற ஸ்ரீமனை ஏன் அந்த கும்பல் தாக்கவில்லை.  20 மாணவர்கள் கொலைகார கும்பலாக மாறியதற்கு கல்லூரி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கோஷ்டி மோதல் என அமைச்சர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

எவிடன்ஸ் கதிர்
எவிடன்ஸ் கதிர்

தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மாணவரை கொலை செய்த கும்பலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகமும் தமிழக அரசும் கூட்டுக் களவாணிகள். அமுதன் எழுதிகொடுத்த கஞ்சா கும்பல் பட்டியல் தற்போது காவல் துறையிடம் உள்ளது. அந்த பட்டியலை வைத்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கோஷ்டி மோதல் என இவ்வழக்கை காவல்துறை முடிக்க பார்க்கிறார்கள். சட்டப்பேரவையில் அமைச்சர் என்ன பேசுகிறாரோ அதன்படி காவல்துறை விசாரணை நடத்துகிறார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமுதனிடம் எப்படி  கல்லூரி கட்டணம் வாங்க முடியும். காவல்துறை ஏன் கல்லூரி நிர்வாகத்தை விசாரிக்கவில்லை. கோஷ்டி மோதல் என்பது கல்லூரியின் கட்டுக்கதை ஆகும்.

அமுதன்
அமுதன்

அமுதனிடம் விசாரணை நடத்திய 4பேர் அடங்கிய கல்லூரி நிர்வாகத்தில் ஒருவர் தான் கஞ்சா பட்டியலை வெளியே சொல்லி உள்ளது. 24 ஆம் தேதி அமுதனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். 31ஆம் தேதிவரை அமுதன் கல்லூரி விடுதியில் தங்க அனுமதித்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்துதான் அமுதன் வெளியில் இருந்து கல்லூரி தேர்வுக்கு சென்றுள்ளார். கல்லூரி நிர்வாகத்தை இவ்வழக்கில் சேர்க்க வேண்டும். அமுதனின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்”என கூறினார்.

அமுதனின் தாயார் சுமதி கூறுகையில்,

“கல்லூரி நிர்வாகம் எங்களிடம் மூன்று கட்டமாக விசாரணை செய்தது. கல்லூரி நிர்வாகத்திடம் என் மகன் அமுதன் தைரியமாக பேசினான். எங்களை வெளியே அனுப்பிவிட்டு கல்லூரியில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து அமுதனிடம் கல்லூரி நிர்வாகத்தினர் எழுதி வாங்கி கொண்டனர். விசாரணைக்கு அழைத்தபோது கல்லூரிக் கட்டணம் 25,000 கட்டினோம். உடனடியாக 1 1/2 இலட்சம் கட்டணம் கட்ட வேண்டும் என கூறினார்கள். அமுதன் தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேறி கொள்கிறோம் என நாங்கள் எந்த காலகட்டத்திலும் எழுதி கொடுக்கவில்லை. கல்விக்கட்டணம் தொடர்பாக மட்டுமே கடிதம் கொடுத்தோம். கல்லூரியை சேர்ந்த 20 மாணவர்கள் கொலையில் ஈடுபட்டபோது கல்லூரிக்கு எப்படி தொடர்பில்லை என கூற முடியும். கல்லூரிக்கு 10 இலட்சம் கூட தருகிறோம் என் மகனை திருப்பி கொடுக்க முடியுமா? கல்லூரி பெயர் கெட்டுவிட கூடாது எண்பதற்காக பொய் பேசுகிறார்கள் என கூறினார்.

—    ஷாகுல் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.