அண்ணாமலை என்ன செய்ய போகிறார் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அண்ணன் அண்ணாமலை பா.க.ஜ.விலிருந்து வெளியேறுவார்.. அல்லது வெளியேற்றப்படுவார், இரண்டில் எது நடந்தாலும் அது பேசி வைத்துச் செய்யும் நாடகம்தான் என்று பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்.

அப்போதைய சூழலில் அவர் த.வெ.க.வில் சேர்ந்து வழிநடத்துவார் என்று யூகித்தேன்.. இடைப்பட்ட காலத்தில் கதை மாறியிருக்கிறது, அவரது கதாபாத்திரமும் மாறியிருக்கிறது..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும்..?
அ.தி.மு.க. தலைகள் அண்ணாரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு அணி மாறுவார்கள், அநேகமாக பெருமளவு எம்.எல்.ஏ.க்களும் அதில் இருக்கலாம், ஒரு சுவாரஸ்யத்துக்காக தி.மு.க.விலிருந்தும் சிலர் உருவப்படலாம்.

ஊடகங்கள் அண்ணாரை ஒப்பற்ற தலைவனாகச் சித்தரிக்கும்.. அண்ணார் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வார்.. ஆளும் த.வெ.க அண்ணாரை பிரதான எதிர்க்கட்சிபோல் நடத்தும்..

விஜயின் அரசியல் வார இறுதி நாட்களில் மட்டுமே: பாஜக தலைவர் அண்ணாமலைவிஜய்×அண்ணாமலை என தமிழ்நாட்டு அரசியல் சூழல் கட்டமைக்கப்படும், தி.மு.க. மீது ஊழல் வழக்குகள் சுமத்தப்பட்டு சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம்..
பதவிக்காகத் தி.மு.க.வுக்கு வந்த பழைய அ.தி.க.வினர் அமைதியாகப்படலாம், அணி மாறச் செய்யலாம்..

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவ்வாறு படிப்படியாக தி.மு.க.வை நீர்த்துப் போகச் செய்யும் ஆபரேஷன் திராவிடத்தின் தொடக்கம்தான் இது..

திட்டமெல்லாம் சரிதான்
ஆனால் தி.மு.க.வுக்கு ஒரு வரலாறுண்டு..
ஆளும்கட்சியாக இருக்கும்போதுகூட தி.மு.க.வை சேதாரப்படுத்த முடியும்..
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதையும் சந்திக்கும் பலம் அதற்கு இயல்பாக வாய்த்துவிடும்,
சோதனையான நேரத்தில் சாய்க்கவே முடியாத சாகாவரம் அதன் சிறப்பியல்பு

அண்ணாதுரை இட்டுத்தந்த அஸ்திவாரம் மிகவும் பலமானது, கலைஞர் கட்டி வைத்திருக்கும் கட்டிடம் உறுதியானது..
அதை அண்ணாமலைகள் அசைப்பது கடினம்..

பார்ப்போம்

—  கவிதாபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.