“எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும்” விழிப்புணர்வு கருத்தரங்கு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத் துறை –  செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத் இயக்கத்தின் சார்பாக எல் நினோ பருவநிலை மாற்றமும் நமது முன்னெடுப்பும் என்ற தலைப்பில் உலக ஓசோன் தினம் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு (கரிய அமில வாயுவை) தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே ச தனது தலைமையுரையில் எல் நின் பற்றியும் இயற்கை கால நிலை நிகழ்வை பற்றியும் தற்பொழுது எற்பட்டுள்ள இயற்கை மாற்றங்களை பற்றியும் கூறினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கல்லூரியின் செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே ச மற்றும் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் ஆகியோர் தங்களது உரையில் காடுகளை இயற்கை வளங்களை அழித்தல் போக்குவரத்து தொழிற்சாலைகள் மற்றம் நாம் பயன்படுத்தும் சில சதானங்கள் வழியாக கார்பன் உமிழ்வை குறைத்தால் ஓசோன் படலத்தை பாதுகாக்கலாம் என்றும் இதனால் இயற்கை தன்னையே சரி செய்து கொள்ளும் என்று கூறினார்கள்.

விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச பசுமையான சூழ்நிலை உருவாக்குவதும்  அதில் மாணாக்கர்களின் பங்கு பற்றியும் மக்களுக்கு இவற்றைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் தனது தொடக்கவுரையில் எடுத்துக்கூறினார்.

இக்கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறை, புவி அறிவியல் பள்ளித் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெகன்குமார் தனது சிறப்புரையில்; ஓசோன் தினத்தின் மையக்கருத்தான குளிர்ந்த பூமிக்கான உலகளாவிய நடவடிக்கை பற்றியும் எல் – நினோவிற்கான விளக்கங்களையும் பசுபிக்கடல் வெப்பமடைவதால் ஏற்படும் மழை  வெப்பநிலை வானிலை காலநிலை ஆகியவற்றின் மாற்றம் அவற்றின் தாக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர்ந்து மரக்கன்றுகள் நடுதல், கையெழுத்து இயக்கம், வாகனமில்லா நாள்எல் நினோ விழிப்புணர்வு சுவொரட்டி தயாரிப்பு போட்டி மற்றும் அய்கஃப் மாணவர்களின் விழிப்புணர்வு வீதிநாடகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்லூரி தாவரவியல் துறை அருகிலுள்ள திறந்தவெளியில் நடைபெற்றன.

இந்நிகழ்வின் மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியம், பசுமைச் சூழலை உருவாக்குதல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நமது முன்னெடுப்பு நடவடிக்கைகள் நமது பொறுப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கானபணிமுறை இரண்டின் துணை முதல்வர் ஆண்டோனி திவாகர் சந்திரன் காலநிலை நெருக்கடி அறிவோம் செயல்படுவோம் என்கிற உறுதி மொழி ஏற்றார்.

வந்தவர்களை ஒருங்கிணைப்பாளர் யசோதை வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பளர் ரட்சனா நன்றி கூறினார். முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களை கொண்டு பள்ளி மாணாக்கர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பள்ளிகளிலும் கிராம மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமத்திலும் இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“இன்றே சுற்றுச்சூழலைக் காப்போம்; பசுமையான நாளைய தலைமுறையை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சியை விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன்  சுதாகர் மற்றும் அலுவலக இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் அய்கஃப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் யோகராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்யதிருந்ததார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.