அங்குசம் பார்வையில் ‘பீப்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு : கர்னல் ஆர்.கணேசன், டைரக்டர் : இல.சண்முக சுந்தர், ஆர்ட்டிஸ்ட் : ராகவ் ரங்கநாதன், யாமினி லக்‌ஷ்மணன், பிரேர்னா கண்னா, பிரியதர்ஷினி, நித்தீஷ் வீரா, வெங்கட் ரமேஷ், ஹெலன், ஒளிப்பதிவு : பிரதீப் பத்மகுமார், இசை : பிரசாந்த் விஹாரி, எடிட்டிங் : அபிஷேக், விக்னேஷ், பி.ஆர்.ஓ. ஏ.ஜான்.

ஒரு போட்டோவைப் பார்த்தாலே, அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை கரெக்டா சொல்பவர் ராகவ் ரங்கநாதன். யாமினி லக்‌ஷமணனுடன் நெருங்கிப் பழகுகிறார் ராகவ். அது லவ்வா? இல்ல வேறெதுவுமா?ன்னு நமக்குத் தெரியல. இதுமட்டுமா? இடைவேளை விடும் வரைக்கும் படத்துல என்ன கதை? என்ன நடக்குதுன்னு சத்தியமா நமக்குப் புரியல. ஒரே குடி, கூத்து, கும்மாளம் தான். அட போங்கப்பா நீங்களும் உங்க ‘பீப்’பும்னு டென்ஷனாகும் போது, யாமினி லக்‌ஷ்மணன் உடம்பெல்லாம் ரத்தக்கறையுடன் செத்துக்கிடக்குறார். இடைவேளை விட்டாயங்க.

இந்த வார அங்குசம் வார இதழில்…

‘Beep’ reviewஒரு டீ சாப்பிட்டுட்டு உள்ளே போனோம். அதுக்குப் பிறகு தான் படமே ஆரம்பிச்சுது. புரொஃபஸர் சிதம்பரம் [ டைரக்டர் இல.சண்முக சுந்தர்] குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பன்னிரெண்டாவது மாடியிலிருந்து குதித்து செத்துக் கிடக்கிறார் யாமினி லக்‌ஷ்மணன். இதை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் நித்தீஷ் வீரா[ கொரோனாவில் இவர் இறந்தே ஐந்து  ஆண்டுகளாகிவிட்டன. அப்படின்னா இந்தப் படத்தை எப்ப எடுத்திருப்பாய்ங்கன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க]

யாமினி கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பதைக் கண்டு பிடிக்க திண்டாடுகிறது போலீஸ். சிதம்பரம் வீட்டில் கடைசியாக யாமினி செல்போனில் டென்ஷனாக எடுத்திருந்த போட்டோக்களை வைத்து சில தடயங்களைக் கண்டு பிடிக்கிறார் ராகவ். இது போலீசுக்கு உதவியாக இருந்தாலும் சிதம்பரம் தான் கொலைக்குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என நித்தீஷ் வீரா ரிஜெக்ட் பண்ணுகிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘Beep’ reviewபோட்டோவுக்குள் இருப்பதை வைத்து அங்கே என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டு பிடிக்கும் ராகவ்வின் பிரிலியண்ட் ஐடியா நல்ல கண்டெண்ட் தான். ஆனால் அதை எக்ஸ்கியூட் பண்ண டைரக்டர் சண்முகசுந்தர் ரொம்பவே தடுமாறி, படத்தையும் தள்ளாட வைத்துவிட்டார்.

ராகவ்வின் நண்பர்கள்-நண்பிகளாக வருபவர்கள் எல்லாரும் ஓரளவு தாக்குப் பிடித்து நடித்திருக்கிறார்கள். மற்றபடி இந்த ‘பீப்’-ல் எந்த ‘பெப்’பும் இல்லாமல் சப்புன்னு இருக்கு.

அங்குசம் பார்வையில் ‘பீப்’ 40/100

—  ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.