அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜய் செய்த பெரிய தவறு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முதல்வராக்காமல் ஆளுநர் தாமதிப்பது ஏன்? கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அட்வைஸ்

சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் இருந்தாலும் கூட விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பல மாநிலங்களில் பெரும்பான்மை இன்றி தனிபெரும் கட்சிகள் ஆட்சியமைத்து மெஜாரிட்டியை நிரூபித்து உள்ளன.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆனால் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் கூட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி வருகிறார். இதன் பின்னணியில் விஜய் செய்த தவறும், அதனை முக்கிய அஸ்திரவமாக ஆளுநர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

அதோடு இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு, மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முக்கிய அறிவுரையும் வழங்கி உள்ளது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாவரும் கேளீர்

Vijay visits Lok Bhavan again, no word on govt formation - Rediff.comபொதுவாக நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தால் அந்த கட்சி தலைவர் முதல்வராக பதவியேற்று ஆட்சியை நடத்தலாம். இதற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி வழங்குவார். ஆனால் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சி அமைப்பதில் தனிப்பெரும் கட்சியை (இருப்பதில் அதிக இடங்களை வென்ற கட்சி) தான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார். அந்த கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம். இதுதான் மரபு.

அந்த வகையில் தமிழகத்தில் 118 என்ற மெஜாரிட்டி இடங்களில் எந்த கட்சியில் வெல்லவில்லை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்று காலியாகிறது. இதனால் சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 233 ஆக குறைந்து மெஜாரிட்டி நம்பர் 117 ஆக சரிகிறது. இப்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இதனால் தவெக பலம் 112 (விஜய்யை ஒரு தொகுதி எம்எல்ஏவாக மட்டும் கருத வேண்டும்) எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது. இன்னும் 5 பேர் தேவையாக உள்ளது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதனால் தான் தவெக 2 கம்யூனிஸ்ட், விசிகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை கோரி வருகிறார். அவர்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக சொல்லிவிட்டார். இதனால் தவெக தவித்து வருகிறது. இந்த தவிப்புக்கு விஜய் செய்த ஒரு தவறு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது விஜய் தான் தனிப்பெரும் கட்சி என்று தனது கட்சி எம்எல்ஏக்கள் 107 பேரின் ஆதரவு கடிதத்தை மட்டும் ஆளுநரிடம் வழங்கி இருக்க வேண்டும். அப்படி வழங்கியிருந்தால் நிச்சயம் ஆளுநர் அவரை முதல்வராக்கி இருப்பதோடு, அடுத்த சில நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியிருப்பார். அப்போது காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை விஜய் நிரூபித்து இருக்கலாம்.

ஆனால் விஜய் ஆளுநரிடம் தவெகவின் 107 எம்எல்ஏக்கள் + காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 112 பேரின் கடிதத்தை வழங்கி உள்ளார். இதுதான் பிரச்சனையாக உள்ளது. இப்படி விஜய் கூறியதால் கூட்டணி ஆட்சி அமைகிறது என்ற பொருள் வருகிறது. இதனால் கூட்டணி ஆட்சி எனும்போது மெஜாரிட்டிக்கு தேவையான 117 இடங்கள் வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார். இதனால் தான் மெஜாரிட்டி எங்கே? மீதமுள்ள 5 எம்எல்ஏக்கள் எங்கே? அவர்களின் ஆதரவை பெற்று வந்து முதல்வராக பதவியற்று கொள்ளுங்கள் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தான் விஜய்யின் விவகாரம் பற்றி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டதாக நேற்று செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த வேளையில் மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முக்கிய விஷயத்தை ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். அதாவது தவெக தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரவில்லை. கூட்டணி என்பதால் 118 பேரின் ஆதரவு அவசியம். விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால் 117 எம்எல்ஏககள் வேண்டும். அப்போது தான் ஆட்சி அமைக்க முடியும். புதிய முதல்வராக விஜய் பதவியேற்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் தான் விஜய்யின் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை இன்னும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்காமல் அவரை காக்க வைத்துள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.