சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

நூல் அறிமுகம்-8

சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

மொழிபெயர்ப்பு – நர்மதா தேவி

வெளியீடு:- இடையன் இடைச்சி நூலகம், ஈரோடு. (98412 08152)

விலை ரூ 50/-.

ஒரு பன்றிக் குடும்பத்தில்,  ஊரிலிருந்து சாந்தநாயகம் என்ற பன்றிக்குட்டி, அந்த வீட்டுக்கு வருகின்றது. ஆண் வேலை, பெண் வேலை என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா வேலைகளையும் செய்கிறது. அது ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம், மற்ற பன்றிக்குட்டிகளுக்கு வருகின்றது. எல்லாம் சேர்ந்து குளிக்கும் போது, உண்மையைக் கண்டுபிடிக்கின்றன.

பெண் குழந்தை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்; இந்த உடை போட வேண்டும் என்றெல்லாம் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகளுக்கு எதிராகக் குந்தைகளிடம் பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தும் கதை இது.

இக்கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த கதையைச் ‘சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?’ என்ற தலைப்பில், நர்மதா தேவி தமிழில் படக்கதையாக மொழிபெயர்த்து இருக்கிறார். ஓவியர் A.ஜீவானந்தம் சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். வழ வழ தாளில், மிகச் சிறப்பான வடிவமைப்பு. 9+ சிறுவர்க்கானது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.