திருச்சி – புத்தக வெளியீட்டு விழா மற்றும் நூலகலருக்கு பாராட்டு விழா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதல் மாவட்ட நூலக அலுவலராக திரு.அ.பொ.சிவகுமார் அவர்கள்  2002 ஆண்டு  முதல் பணியாற்றி வந்தார். அவர் தலைமைப் பொறுப்பில் மாவட்ட நூலகம் அனைத்து வயது மக்களுக்கும், பயனளிக்கும் ஒரு கல்வி மையமாக மலர்ந்துள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகம் இருந்த இடமே தெரியாமல் பர்மா பஜார் கடைகளுக்கு நடுவில் மிகவும் சிதிலமடைந்த கட்டிடமாக இருந்தது. மாவட்ட நூலகர் அலுவலர்களின் சீரிய முயற்சியால் நூலக வளாகத்தில் இயங்கி அனைத்து பர்மா பஜார் கடைகளையும் (50 மேற்ப்பட்ட வழக்குகள்) அகற்றப்பட்டு  பிரமாண்ட நூலக வளாகமாக அமைந்தது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

நூலகத்தின் கட்டமைப்பு மேம்படுத்தல், சுகாதார மேலாண்மை, வருகையாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கம் முயற்சி எடுத்து வெற்றி பெற்றார்.

நூலக வளாகத்திற்கு தினமும் 1000 கணக்கில் வாசகர்கள் வந்து செல்வதும், கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து படிப்பது, குறிப்பாக அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகும் 100 கணக்கானோர் பயன்படுத்தி வெற்றிபெற உதவியவர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும் மாவட்ட மைய நூலகம் வந்து நூல்கள் வாங்கி செல்லும்போது நூல்கள் இரவல் பகுதி இன்றைக்கு முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட நூல்கள் இரவல் பகுதி, குழந்தைகள் படிக்க தனி பகுதி, கணினி மையம். குறிப்புகள் எடுக்கும் கட்டுரை  புத்தகம் உள்ள பகுதி, குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு என தனி அறிவியல் பகுதி இரண்டாம் தளத்தில், போட்டி தேர்வர்கள், பார்வையற்றோர் படிக்க Braille வகை நூல்கள் மேலும் யார் உதவியும் இல்லாமல் அவர்கள் தங்கள் புத்தகம் இருக்கும் பகுதிக்கும் டாய்லெட் செல்ல பிரத்யேக டைல்ஸ், இணையம் வசதி நல்லமுறையில் இயங்கும் வாசகர் வட்டம்,

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் கிளை நூலகம் அளவில்  வாசகர் வட்டம் அமைய பாடுபட்டார். புதிய மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிகழ்ச்சி, முதியவர்களுக்கு மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு பல்வேறு மாதிரித் தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுத்தவர். பணியாளர்கள் குறைவாக இருந்தாலும், நூலக சேவைகளை விரிவுபடுத்தியது பாராட்டுதற்குரியது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி மாவட்ட நூலகருக்கு மாவட்ட மைய வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதில் மருத்துவர் அலீம், பத்மஸ்ரீ சுப்புராம், திருக்குறள் முருகானந்தம், பனானா லீப் மனோகரன், திருச்சி மாவட்டமைய நூலக வாசக வட்டம் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி, அருணாசாலம், நன்மாறன், இல.கணேசன், உதயகுமார் பெரியசாமி,மாரிமுத்து, லால்குடி முருகானந்தம், கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமுர்த்தி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், துளசிதாசன், பார்வையற்றோர் அமைப்பு, ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், தண்ணீர் அமைப்பு போன்ற திருச்சி மாவட்ட பொது அமைப்புகள் கலந்துக் கொண்டு நூலகர் அ.பொ.சிவகுமார் அவர்களின் செயல்களை பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் பணிநிறைவு பாராட்டு மலர் ,”நமது நூலகர்” என்ற புத்தகத்துடன், தேவிகா சிவகுமார் அவர்கள் எழுதிய “அவரும் நானும்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. முடிவில் நூலகர் அ.பொ.சிவகுமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

—  அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.