அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

 ‘ஆகவே மானுடம் போற்றுவீர் ‘ – நூல் வெளியீட்டு விழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கவிஞர் அய். பிரகாசம்  அவர்களின்  ”ஆகவே மானுடம் போற்றுவீர்” என்ற நூலின் வெளியீட்டு விழா,  15.07.2026 மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் ஸ்ரீ சங்கீதாஸ் சிந்தூர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் தலைமை வகித்து, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திருமதி பி. சகாய பிரியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்நிகழ்வில், புகழ்பெற்ற கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் நூல் திறனாய்வு செய்தார். முனைவர் சு.சு. பரமேஸ்வரன், முனைவர் மா. செங்குட்டுவன்முனைவர் ராணி சக்கரவர்த்தி, திருமிகு கே.கே. எம்.டி. பாபுராஜ் ஆகியோர் நூலின் கருத்துச் செறிவு, சமூக விழிப்புணர்வு மற்றும் மனிதநேய சிந்தனைகளைப் பாராட்டி வாழ்த்துரையாற்றினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நூல் வெளியீட்டு விழாநூலாசிரியர் கவிஞர் அப். பிரகாசம் அவர்கள் ஏற்புரையாற்றினார். மனிதநேயமும் சமூக ஒற்றுமையும் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

நிகழ்ச்சியை முனைவர் பி. சகாய அமுதா அவர்கள் சிறப்பாக நெறிப்படுத்தினார். இறுதியில் செல்வி ச. பியோனா   மெர்லின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு நூலாசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மனிதநேய சிந்தனைகளை மக்களிடையே பரப்பும் சிறந்த படைப்பாக ‘ஆகவே மானுடம் போற்றுவீர்” நூல் அமையும் எனப் பேச்சாளர்கள் ஒருமனதாகக் கருத்துத் தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.