திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !
திருச்சி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் எதிர்வரும் 01.09.2026 அன்று முதல் செல்போன்கள் இத்திருக்கோயிலுக்குள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட உள்ளது.
இத்தகவல் குறித்து இத்திருக்கோயில் மூலம் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 01.09.2026 அன்று முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் (அலைபேசி) எடுத்து செல்வது தடைவிதிக்கப்பட உள்ளது. செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறும், பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக 1) திருக்கோயில் வரிசை வளாகம் கிழக்கு. 2) வரிசை வளாகம் மேற்கு, 3) திருக்கோயில் தெற்கு தேரோடும் வீதி, 4) திருக்கோயில் மேற்கு தேரோடும் வீதி ஆகிய நான்கு இடங்களில் கைபேசி பாதுகாப்பு பெட்டக மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேற்காணும் இடங்களில் அமைக்கப்படவுள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை (அலைபேசிகளை) ரூ.5/- கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு, டோக்கன் பெற்றுக்கொள்ளலாம், அம்பாளை தரிசனம் செய்து வெளியே திரும்பியவுடன் டோக்கன் காண்பித்து செல்போன்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உத்தரவினை மீறி திருக்கோயிலுக்குள் மறைமுகமாக எடுத்துச்செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.