பாலின சமத்துவம் சார்ந்த கதைகளின் கதாபாத்திரங்கள் !

சிறார் இலக்கியம்- 11

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காலங்காலமாக இயல்பு வாழ்க்கையில் தொடங்கி சினிமா கதாபாத்திரங்கள், சிறுகதைகள், நாவல்கள் வரை பெண் என்ற கதாபாத்திரம் மெல்லிய தேகத்துடனும், மாசு மரு இல்லாத வெளிரிய முகத்துடன், நீண்ட கூந்தல், வயதிற்கு ஏற்ற உடையாக பாவாடை சட்டை, பாவாடை தாவணி, புடவை  இப்படி பல்வேறு உடல்சார் அளவீடுகளையும்,  பொறுமை அமைதி, தனக்கு தீங்கிழைக்கப்பட்டாலும் கூட எதிர்வினை ஆற்றாமல்  கண்களில் மட்டுமே கண்ணீரை உதிர்த்துக்கொண்டு நிற்க வேண்டும் என்றெல்லாம் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண் பிள்ளைகள் என்றால்  வாட்டசாட்டமான உடல், உயர்ந்த தேகம், குறைவான சிகை அமைப்பு, எதற்குமே கட்டுப்பாடு இல்லாமல் ஆதிக்கத் தன்மையினை வெளிப்படுத்துதல், பேண்ட் சட்டைகள், ஆடை சுதந்திரம் இப்படி பல்வேறு வரையறைகளும் எழுதப்படாத சட்டங்களாக நிலவி வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நவீன தொழில்நுட்ப காலத்தில் கூட இப்படி எல்லாம் இருக்கிறதா? எங்கே இருக்கிறது? அவரவர் அவரவர்களுக்கு பிடித்த வாழ்வியலையும், உடைகளையும், சூழலையும் வாழ்ந்து கொண்டிருக்குமளவிற்கு நம் சமூகம் வளர்ந்துள்ளதுதானே என்று பலர் கேள்வி எழுப்புவது  புரிகிறது.

இச்சூழல் முற்றிலும் நம் சமூகத்தில் மாறுபடவில்லை. ஆண்-பெண் தோற்றத்திற்கான வரையறையை மீறிய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கே இங்கு  நிறைய பெண்கள் போராடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பான்மையாக சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும், பொது புத்தி பார்வைகளின் அடிப்படையிலுமே  இன்று வரை இச்சூழல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போக்கு சரியானதா என்று கேட்டால்  முற்றிலும் தவறு என்று தான் கூற வேண்டும். தற்காலத்தில் பெண்களும், ஆண்களைப் போன்று பணிச்சூழல்களையும், பயணச் சூழல்களையும்  கையாண்டு வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்படி இருக்கையில்  அவரவர் தனக்கு வசதியான ஆடைகளை அணிவதுதான் சரியானதாக இருக்கும்.

உதாரணமாக விளையாட்டு வீராங்கணைகள், ஓட்டப்பந்தயம் ஓடும் பெண்கள்  பாவாடை தாவணியையோ, புடவையையோ அணிந்து கொண்டு இச்செயல்களை செய்ய முடியாது. இதுபோன்று பல்வேறு வேலைகளிலும் இச்சூழல் உள்ளது. நிறைய விளையாட்டுப் போட்டிகள் குறித்த கனவு  ஆடைகளால் சிதைக்கப்பட்ட கதைகளும் நம் சமூகத்தில் நிறையவே உள்ளது.

இந்நிலையை குறித்து நிறைய பெண்கள் சமூகத்தில் பேசினாலும் கூட இன்று வரை  பெரும்பான்மை மாற்றத்தை எவராலும் கொண்டு வர முடியவில்லை. இதற்கான ஒரு சரியான தீர்வு அடுத்தத் தலைமுறைகளுக்கு இச்சூழலை குறித்து கதைகளின் வழியாக கூறுவதே சிறந்ததாகும்.

( தொடர்ந்து பேசுவோம்)

—  கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா்,  கதைசொல்லி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.