அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கல்லூரி மாணவன் மரணத்தின் பின்னணியில் எம்.எல்.எம். குரூப் ! அதிர்ச்சி பின்னணி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் 18 வயதேயான முகேஷ்குமார். திருச்சி ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு இளங்கலை இரண்டாமாண்டு மாணவர். கல்லூரியில் படித்துக் கொண்டே, பகுதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயரிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்ததாக சொல்லப்படும் விவகாரம் தற்போது  சர்ச்சையாகியிருக்கிறது.

முகேஷ்குமார்
முகேஷ்குமார்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

எளிய கிராமப்புற பின்னணியை சேர்ந்த முகேஷ்குமாரின் பெற்றோர்கள் தெருக்கூத்து கலைஞர்கள். 12 ஆம் வகுப்பு பயிலும் ஒரு தங்கை. போட்டித் தேர்வு எழுதி டி.எஸ்.பி. ஆக வேண்டும். மிடுக்காக புல்லட்டில் ஊரை வலம் வர வேண்டும் என்ற கனவுகளோடு, கல்லூரிக்கு கால் எடுத்து வைத்த முகேஷ்-இன் கனவுகள் அத்தனையும் கருகிப்போய்விட்டன.

முகேஷ்குமார் குடும்பத்தினர்
முகேஷ்குமார் குடும்பத்தினர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

”13,000 ரூபாய் கட்டி இந்த வேலைக்கு சேரனும்னு சொன்னப்பவே வேண்டாம் என்றுதான் சொன்னோம். பசங்க வந்து ரொம்ப வற்புறுத்துனாங்க. கார் வாங்கலாம், பைக் வாங்கலாம், வீடு கட்டலாம். உன்னோட நிலையே மாறிடும்னு சொன்னாங்க. கடைசியில இப்படி ஆகிடுச்சே” என்பதாக கண்ணீர் விடுகிறார்கள், முகேஷின் பெற்றோர்கள்.

கல்லூரி மாணவர்களை குறிவைத்து, எம்.எல்.எம். பாணியில், ஆள் சேர்த்துவிடும் வேலை என்பதே நைச்சியமான முறையிலும், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகும் வகையில், பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையிலும்தான் அமைந்திருக்கிறது, என்கிறார்கள். இதுபோன்றதொரு அழுத்தம் முகேஷ்ஷுக்கும் இருந்ததாக சொல்லப்படும் நிலையில்தான் அவர் சர்ச்சைக்குரிய முறையில் இறந்தும் போயிருக்கிறார்.

அங்குசம் புலனாய்வுக்குழுவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி, சில உண்மைகளை நேரடியாக கண்டறிந்திருக்கிறது.

 

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.