முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !
முதல்வராகும் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவா்கள் வாழ்த்து தொிவித்துள்ளார். கீழ்க்கண்ட கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வாழ்த்துக்களை டுவிட்டர் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தனிப் பெரும் கட்சியாக தவெக உருவாகி அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம்,கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலையை நிரந்தரமாக்கி காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே தற்போதுள்ள 11 ஆயிரத்து 773 ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு கிடைக்கும்.
இதனை முதல் கையெழுத்தாக போட்டு தற்காலிக ஆசிரியர்களின் தலையெழுத்தை மாற்றுவார் என நம்பிக்கையோடு முதல்வராகும் விஜய்க்கு வேண்டுகோளை தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக முன்வைக்கிறோம்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.