அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போக்சோ வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைப்பு

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரிப்பட்டி பகுதியைச்சேர்ந்த 14 வயது சிறுமி அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேற்படி சிறுமியின் வீட்டிற்கு அருகில் ஜெயபால் (39) (ஜெம்புநாதபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.06/26)த.பெ.அய்யாவு, தெற்கு தெரு, கீரிப்பட்டி, கட்டணாம்பட்டி, துறையூர் தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவர் தினமும் மது அருந்திக்கொண்டு மேற்படி சிறுமியின் குடும்பத்தையும், அவரது அருகில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும். அதேபோல் கடந்த 12.04.2026-ம் தேதி காலை மேற்படி சிறுமி அவரது அம்மாவுடன் அவர்களது வீட்டின் வெளியே வேலை செய்துக்கொண்டிருந்ததாகவும். அப்போது அங்கு வந்த ஜெயபால் குடிபோதையில் மேற்படி சிறுமி மற்றும் அவரது அம்மாவை பார்த்து ஆபாசாமாக பேசியுள்ளார்.

திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதனைக்கேட்ட சிறுமியின் அம்மா ஏன் இப்படி பேசுகீறர்கள் என்று கேட்டதற்கு ஜெயபால் மீண்டும் அவர்களை ஆபாசமாக பேசியதைப் பார்த்த சிறுமி அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைப்பார்த்த ஜெயபால் அவர் அணிந்திருந்த கைலியை அவிழ்த்து காட்டியும். ஆபாசமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். அதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே ஜெயபால் சிறுமியையும், அவரது அம்மாவையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் .93/26, U/s 296(b), 351(2) BNS r/w 11(1), 12 of POCSO Act – Q 13.04.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம். இ.கா.ப.,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (15.05.2026) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும், திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 47 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.