அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘டிசி’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், இயக்கம்: அருண் மாதேஸ்வரன், ஆர்டிஸ்ட்: லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா ஏ.கே., கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய், கிரிஷ் தயாள், அவினாஷ் ரகு தேவன், ஜவஹர் சக்தி, ஒளிப்பதிவு: முகேஷ், இசை: அனிருத், கூடுதல் திரைக்தை: அருண் ரஞ்சன், எடிட்டிங்: ஜிகே.பிரசன்னா, ஸ்டண்ட்: பிசி ஸ்டண்ட்ஸ், பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்

தனது மகன் தேவதாஸ்[லோகேஷ் கனகராஜ்] நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பது அப்பா மோட்டார் மணி[ கஸ்தூரி ராஜா]யின் ஆசை. ஆனால் தேவதாஸோ…சொத்துக்காக தனது அம்மாவைக் கொன்ற தாய்மாமன்களை பொலி போட்டுவிட்டு 13 வயதிலேயே ஜெயிலுக்குப் போகிறான். அங்கே அவனின் வாழ்க்கையை மூர்க்கமாக மாற்றுகிறது. ஜெயிலிலிருந்து தப்பியதும் தனக்கென ஒரு ரவுடிக்கும்பலை உருவாக்கி, போலீஸ் வேனில் வரும் ஆயுதங்களைக் கடத்துகிறான். ஒரு ஏழைச் சிறுவனின் படிப்புக்காக பணம் சேர்த்து வைத்திருக்கும் அப்பாவித் தகப்பனைக் கொன்ற போலீசைப் போட்டுத் தள்ளுகிறான். இப்படியே தொடர் குற்றச் செயல்களாகவே போய்க் கொண்டிருக்கும் தாஸ், நைட் பார் ஒன்றில் பாடகியாக இருக்கும் பார்வதியை [சஞ்சனா] சந்திக்கிறான்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

‘டிசி’ “உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை” என்ற இசைஞானியின் பாடலை பார்வதியின் குரலில் கேட்டதும் உருகுகிறான். அவளைப் பற்றி விசாரித்து காதல் வரும் நேரத்தில் தாஸ் கும்பலைப் பிடிக்க வரும் போலீஸ் டீமில் இருக்கும் இன்ஸ்பெக்டர், பார்வதியைச் சுட்டுக் கொல்கிறான். அதன் பின் விபச்சார விடுதியில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட சந்திராவை [ வாமிகா கபி]ப் பார்த்ததும் பார்வதியின் நினைவு வருகிறது. அங்கே வேறொரு  வில்லன் கும்பலுடன் நடக்கும் மோதலில் அனைவரயும் போட்டுத் தள்ளிவிட்டு, அங்கிருக்கும் இளம் பெண்களைக் காப்பாற்றி வெளியே அனுப்புகிறான். தேவதாஸுடனேயே சந்திராவும் பயணிக்கிறாள்.

இதான் தேவதாஸ்—சந்திரா என்கிற ‘டிசி’யின் கதை. கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், வேலூர் பகுதிகள் தான் கதைக்களம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தமிழ் சினிமா கண்டு பிடிக்கப்பட்ட காலத்திலிருந்து பயணிக்கும் பழிவாங்கும் கதை தான் இந்த ‘டிசி’யிலும் பயணிக்கிறது. ஆனால் அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையிலும் கதை மாந்தர்களின் வலியும் ’டிசி’யை டோட்டல் டிஃபெரென்டாக மாற்றுகிறது. வெட்டு, குத்து, துப்பாக்கிச் சத்தம், ரத்தச் சகதி இவையெல்லாம் அதிகம் திரையில் பீறிட்டாலும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையுடன் முடிச்சுப் போட்டு, திரைமொழியால் நம்மை கட்டிப் போடுகிறார் டைரக்டர் அருண் மாதேஸ்வரன். படத்தில் எல்லா ஃபிரேம்களுமே ஏதோ ஒருவகையான உணர்வை நமக்குள் பதிய வைத்துக் கொண்டே இருப்பது தான் அருண் மாதேஸ்வரனின் மேஜிக். ரத்தம் தெறிக்கும் கொடூரக் கொலைகள் நமக்குள் பகீர்த்தன்மையை ஏற்படுத்துவதையும் மறுப்பதற்கில்லை.

ஹீரோவாக அல்ல…கதையின் நாயகன் தேவதாஸாக டைரக்டர் லோகேஷ் கனகராஜ், கனகச்சிதமாக பொருந்திவிட்டார். பில்டப் சீன்கள், புகழ்ச்சிப் பாடல்கள், ரொமான்ஸ் சீன்கள் இப்படி எதுவுமே இல்லாமல், கதை என்ன கேட்டதோ… அதை கர்மசிரத்தையுடன் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவரின் நிஜத் தோற்றமே இந்தக் கேரக்டருக்கு ஆகப்பெரிய ப்ளஸ். பார்வதியைக் கொன்ற இன்ஸ்பெக்டரை பொலி போடுவது, சந்திராவைக் காப்பாற்றி தம்முடனேயே அழைத்துச் செல்வது, நதியில் நின்று கொண்டு சந்திராவுடன் பேசும் சீன் கவிதை ரசனை. அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜும் சேர்ந்தா என்னாகுமோன்னு நமக்கு திக்திக்குன்னு இருந்துச்சு. ஆனால் அதை உடைத்து நொறுக்கி புதிய அத்தியாத்தை எழுதியிருக்கிறார்கள் இருவரும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாடகியாக சஞ்சனா சில காட்சிகளே வந்தாலும் ஸ்டைலிஷாக வருகிறார். தாஸிடம் தன்னைப் பற்றியும் தனது அக்காவைப் பற்றியும் சொல்லிவிட்டு லைட்டரால் லைட்ஸ் சிகரெட்டை பற்ற வைக்கும் சீனில் சபாஷ் சஞ்சனா. மூன்று நிமிடங்கள் ஓடும் அந்த சீனை பெரிய கண்ணாடியில் லோகேஷையும் சஞ்சனாவையும் கொண்டு வந்து அசத்திவிட்டார் கேமராமேன் முகேஷ். டார்க் மஞ்சள், சிவப்பு லைட்டிங்கை படம் முழுக்க கொண்டு வந்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் முகேஷ். ஆக்‌ஷன் சீக்வென்ஸை கம்போஸ் பண்ணிய பிசி ஸ்டண்ட்ஸ் செம மிரட்டல்.

வாம்மா நடிப்பு ராட்சசியே என வரவேற்பு கொடுக்கலாம் வாமிகா கபிக்கு. தான்  விபச்சாரியான கதையை தாஸிடம் சொல்லும் போதும், அங்கே தலையில் வைத்த ஒத்த ரோசாப்பூவுடனேயே க்ளைமாக்ஸ் வரை பயணிப்பதும் தாஸுக்கும் அவரது நண்பர்களுக்கும் தேவைப்படும்  பணத்திற்காக பழைய கஸ்டமர்களை மிரட்டி பணம் வாங்குவது, விபச்சார விடுதியில் தனது கர்ப்பப்பையே வெட்டி எடுத்த டாக்டரைச் சுட்டுக் கொல்வது, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து இரண்டு கைகளாலும் துப்பாக்கிளை ஆபரேட் பண்ணி, போலீசைச் சுட்டுக் கொன்று தாஸைக் காப்பாற்றுவது வாமிகாவின் அவதாரம் அபாரம்.

லோகேஷின் நண்பர்களாக வரும் மூவர், இவர்களுக்கு தலைவர் அரசுவாக வரும் தலைவாசல் விஜய், லோகேஷின்  அப்பாவாக வரும் கஸ்தூரி ராஜா, எல்லா கதாபத்திரங்களையும் மனதில் நிற்க வைத்திருக்கிறார் டைரக்டர் அருண் மாதேஸ்வரன். இவரின் மனத்திரைக்குள் ஓடிய கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மியூசிக் டைரக்டர் அனிருத். ஈரோடு கோவில் திருவிழாவுக்கு பிறகு  வரிசையாக நடக்கும் க்ரைம் சீன்களில் “தகிட…தகிட…தகிட….” என்ற குரலை மட்டும் பின்னணி இசையில் கொண்டு வந்து பிரமிக்க வைக்கிறார் அனிருத்.

டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டது இந்த ‘டிசி’.

அங்குசம் பார்வையில் ‘டிசி’ 60/100

— ஆண்டவா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.