தீபாவளி வந்தாச்சு… தீபாவளி வியாபாரம் கைகொடுக்குமா? 

திருச்சியில் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சிங்காரத்தோப்பு மற்றும் மகாராஜா சத்திரம் பகுதிகளில் வியாபாரம் கடந்த ஆண்டைப் போல இல்லை என சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 40 முதல் 50 ஆண்டுகளாகச் சாலையோரங்களில் கடை நடத்தி வந்த வியாபாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் புதிய இடத்தைத் தேடி வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

புதிய கடைகள் அமைப்பதில் தாமதம், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, மழைநீர் தேங்கும் அபாயம் ஆகியவை வியாபாரத்தைப் பாதிப்பதாகத் தெரிவிக்கின்றனர். தீபாவளி விற்பனையை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள் புதிய கடைப் பகுதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தீபாவளி வந்தாச்சு… தீபாவளி வியாபாரம் கைகொடுக்குமா? 

முழுமையான வீடியோவை காண

Comments are closed, but trackbacks and pingbacks are open.