அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போக்குவரத்து உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

போக்குவரத்து உதவி ஆய்வாளரை
மிரட்டிய திமுக நிர்வாகி!

“கட்சி பிரச்சனைகளுக்காவோ மற்ற பிரச்சனைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் ஃபோன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது”
இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு இன்று விடுத்துள்ள எச்சரிக்கை.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே, தஞ்சாவூரில் ஊரடங்கு உத்தரவை மீறி உரிய ஆவணங்களின்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை நேரில் வந்து மிரட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK


இச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று தஞ்சை அண்ணா சாலையில் உரிய ஆவணம் இன்றி வந்த ஏகே மளிகை என்ற மளிகைக் கடைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கர்;, ரூ200 அபராதம் கட்டுமாறு அதன் ஓட்டுநரிடம் கூறினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதையடுத்து, சரக்கு வாகன ஓட்டுநர் உடனடியாக தஞ்சாவூர் நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டன் என்பவருக்கு ஃபோன் செய்து இதுபற்றி தெரிவித்தார்.
அவரது தகவலின்பேரில், தனது கட்சிக்காரர்கள் சிலருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நீலகண்டன், அச் சரக்கு வாகனத்தை அபராதம் விதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், அவரது மிரட்டலுக்கு அடிபணிய போக்குவரத்து போலீஸார் மறுத்துவிட்டனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited


இந்நிலையில், அங்கு பணியிலிருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் என்பவர், “இதற்கெல்லாம் ரெக்கமண்டேஷனுக்கு வரும் நீங்கள், அன்பழகன் நகரில் என்னோட வீட்டுக்கு தண்ணி வரல, அதை சரி செய்ய வரல,” என திமுக நிர்வாகி நீலகண்டனைப் பார்த்து கேட்டார்.


எதிர்பாராத இத் திடீர் கேள்வியால் அதிர்ச்சியடைந்த அன்பழகன் மற்றும் திமுகவினர், அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, அங்கிருந்து அமைதியாகப் புறப்பட்டுச் சென்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.