அங்குசம் பார்வையில் ‘ டங்கி ‘

0

அங்குசம் பார்வையில் ‘ டங்கி ‘

Dunk
Dunk

தயாரிப்பு: ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லி எண்டெர்டெயின்மெண்ட், ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ். கெளரி கான், ராஜ்குமார் ஹிரானி, ஜோதி தேஷ்பாண்டே. ரிலீஸ்: ஸ்ரீகோகுலம் மூவிஸ் & சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’. டைரக் ஷன் & எடிட்டிங்: ராஜ்குமார் ஹிரானி. கதை: அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, கனிகா தில்லான். ஆர்ட்டிஸ்ட்ஸ்: டாப்ஸி பானு ( டைட்டிலில் கார்டில் இவர் பெயரைத் தான் முதலில் போடுகிறார்கள்), ஷாருக்கான், விக்கி கெளசல், பொமன் இரானி. ஒளிப்பதிவு: சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ். பாடல்கள் இசை: ப்ரீத்தம். பின்னணி இசை: அமன் பந்த். பிஆர்ஓ: யுவராஜ்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பஞ்சாப்பில் உள்ள லல்ட்டு கிராமம். அங்கே டாப்ஸி யின் குடும்பத்திற்குச் சொந்தமான பழைய வீடு கடன் கொடுத்தவர்களால் அபகரிக்கப்படுகிறது. இதேபோல் இரு இளைஞர்கள் மற்றும் மூவரின் குடும்பங்களும் வறுமையுடன் போராடுகிறது. இதிலிருந்து மீள அந்த ஆறு பேரும் லண்டன் சென்று கைநிறைய சம்பாதிக்க முடிவெடுத்து பாஸ்போர்ட் வாங்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

இங்கிலீஷ் சரளமாக பேச வேண்டும், சொத்து இருக்க வேண்டும் என்ற கண்டிஷனால் அப்செட் ஆகிறார்கள். இந்த நேரத்தில் தான் பதான் கோட்டில் ( இந்திப் படங்களில் இதை கரெக்டா கனெக்ட் பண்ணிடுறாய்ங்க) ராணுவ வீரராக இருந்து வாலண்டரி ரிடையர்டு ஆகிறார் ஷாருக்கான்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பதான் கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து நடந்த சண்டையில் பலியான தனது நண்பன் குடும்பம் இருக்கும் லல்ட்டுவுக்கு மல்யுத்த பயிற்சியாளராக வருகிறார் ஷாருக்கான். அந்த குடும்பம் தான் டாப்ஸி யின் குடும்பம். ஷாருக் வந்த பிறகு பொமன் இரானி நடத்தும் இங்கிலீஷ் ஸ்போக்கன் கிளாஸில் அனைவரும் சேர்ந்து தத்துபித்துவென இங்கிலீஷ் கற்று விசாவுக்கு விண்ணப்பித்து இண்டர்வியூ போகும் போது ரிஜெக்ட் பண்ணிவிடுகிறது இங்கிலாந்து தூதரகம். இதனால் ஒரு பிளாக் ஏஜெண்ட் மூலம் சட்ட விரோதமாக பல நாடுகளின் பார்டரைத் தாண்டி லண்டன் போக கிளம்புகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

டங்கி' டிராப்
டங்கி’ டிராப்

அவர்கள் அனைவரும் லண்டன் போனார்களா? பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்ந்தார்களா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘டங்கி’. கழுதையை ஆங்கிலத்தில் டாங்கி என்பார்கள். சட்ட விரோதமாக எல்லை தாண்டுப வர்களுக்கு டங்கின்னு பேராம். நேரடி இந்திப் படம் தான் என்றாலும் ஆங்கில சப்டைட்டிலைப் படிச்சு தான் நாம தெரிஞ்சுக்கிட்டோம். தெரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கதையை சொல்லிப்புட்டோம்.

இந்த மாதிரியான ஆங்கில சப்டைட்டில் படங்களைப் பார்ப்பதில் பெரிய சிக்கல் என்னன்னா, கேரக்டர்களின் பெர்ஃபாமென்ஸை முழுமையாக உள்வாங்க முடியாது. அவர்கள் பேசும் வசனத்தின் வீரியமும் நமக்கு பிடிபடாது. ஆனாலும் ஷாருக்கான் மீதுள்ள மரியாதை, அபிமானம், அபார நடிப்பு, நமக்கு அறிமுகமான டாப்ஸியின் டாப் கிளாஸ் பெர்ஃபாமென்ஸ் இதெல்லாம் தான் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்த ‘ டங்கி’ யுடன் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது.

அதிலும் லண்டன் கோர்ட்டில் ஷாருக்கான் நடிப்பு அபாரம். நான்கு கேமரா மேன்களின் அசாத்திய உழைப்பு, டைரக்டர் ராஜ்குமார் ஹிரானிக்கு பெரிதும் துணையாக இருக்கிறது. பாடல்கள் வரி புரியாவிட்டாலும் இசையின் ஒலி, காட்சிகளின் உணர்வுகளை நமக்குள் கடத்துகிறது. இப்போது வரும் முக்கால் வாசி இந்திப் படங்களில் தேசப் பற்றைத் தூக்கிப் பிடித்து, பாகிஸ்தானை பஞ்சராக்குவதை கர்மாவின் கடன் என நினைக்கிறார்கள். இந்த டங்கியிலும் பதான் கோட் மூலம் கனெக்ட் பண்ணிட்டார் ராஜ்குமார் ஹிரானி. இது அவர்களின் சப் கான்ஸியஸ் மற்றும் பிஸ்னஸ் பாலிஸி போல.        ‌‌.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.