புதிய இ-சேவை மையம் திறப்பு விழா! ஒப்புகைச் சீட்டு வழங்கிய மேயர்!
மேயர் மு. அன்பழகன் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண் 27, தென்னூர் கே. எம் . சி மருத்துவமனை எதிரில் மாநகராட்சி பல்நோக்கு அலுவலக மையத்தில் இ-சேவை மையம் திறந்து வைத்து பார்வையிட்டு பதிவு செய்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 27 வது வார்டில் பல்நோக்கு அலுவலக மையத்தில் மாமன்ற உறுப்பினர், சுகாதார அலுவலர், வருவாய் உதவியாளர் ஆகியோருக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பல்நோக்கு அலுவலக கட்டிடத்தில் பொது மக்களுக்கு தேவையான முக்கிய சேவைகள் வருவாய்த்துறை சேவைகள் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல்.
சமூக நலத்துறை சேவைகள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல். மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துதல். பொது விநியோகத் திட்டம் ஸ்மார்ட் கார்டு தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் செய்தல், போன்ற அரசுத் துறைகள் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட இணையவழிச் சேவைகள் பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுலாம் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்கள் .
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் திரு. வீரமுத்துக்குமார் , மாமன்ற உறுப்பினர்கள் திரு. கமால் முஸ்தபா, திருமதி. ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .






Comments are closed, but trackbacks and pingbacks are open.