திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “திறன்மிக்க பொதுப் பேச்சு” பயிற்சி முகாம்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) விரிவாக்கச் செயல்பாடுகள் துறை மற்றும் ஜூனியர் ஜேசீஸ் விங், ஜேசிஐ ராக்டவுன் – மண்டலம் 23 இணைந்து “திறன்மிக்க பொதுப் பேச்சு” (Effective Public Speaking) என்ற ஒருநாள் பயிற்சி முகாமை கல்லூரியின் சி.எஸ். பிளாக் தரைத்தள குளிர்சாதன கருத்தரங்கு அரங்கில் புதன்கிழமை (23.09.2026) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கச் செயல்பாடுகளின் இணைப் புலத் தலைவர் டாக்டர் சாம் தேவா ஆசீர் ஆர்.எம். தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சிறப்பு விருந்தினராக புனித ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. ஜே. இனிகோ பாபு வினோதன் கலந்து கொண்டு, பொதுப் பேச்சுத் திறன், தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பயிற்சியாளர்களாக ஜேசி கே. ரெய்சா ஹாஸ்மி, ஜேசி டாக்டர் பி. மோனிஷா தேவி, ஜேசி திருமதி வி.சி. பிரியன்ஹா ஆகியோர் பங்கேற்று, மேடைப் பேச்சு, குரல் வெளிப்பாடு, உடல் மொழி, தன்னம்பிக்கை, நேர்முகத் தேர்வு மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறைப் பயிற்சி வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஜேசி டாக்டர் எஸ். முத்துக்குமார், தலைவர், ஜேசிஐ ராக்டவுன் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஜூனியர் ஜேசீஸ் விங், பிஷப் ஹீபர் கல்லூரி, மற்றும் டாக்டர் எம். புஷ்பா ரெஜினா, ஒருங்கிணைப்பாளர், ஜூனியர் ஜேசீஸ் விங், பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களின் பொதுப் பேச்சுத் திறன், தலைமைத்துவத் திறன் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் பயனுள்ள பயிற்சிகளைப் பெற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.