முதல்வர் விஜய் புகழ் பாடிய முதல் சினிமா விழா! ’சட்டென்று மாறுது வானிலை’
’பி.வி.புரொடக்ஷன்ஸ் பேனரில் பாபு விஜய் தயாரித்து டைரக்ட் பண்ணியிருக்கும் படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரிலான இப்படத்தில் ஹீரோவாக ஜெய், ஹீரோயினாக மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் யோகிபாபு,கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன், இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டிங்: டார்லிங் ரிச்சர்ட்சன், காஸ்ட்யூம் டிசைனர்; கமலி, ஸ்டண்ட்: முரளி, பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம்].
வரும் 15-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் மே.11-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சசி, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் தனஞ்செயன், முத்தாரம்மன் குரூப் சேர்மன் சிவக்குமார், சிஎஃப்ஓ சத்யநாரயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எடிட்டர், மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் வழக்கம் போல எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் பேசுவதைப் போலவே டைரக்டருக்கு நன்றி சொன்னார்கள், படம் கண்டிப்பா ஹிட்டாகும் என்றார்கள்.
முத்தாரம்மன் சிவக்குமார், “கொஞ்ச வருசத்துக்கு முன்பு ரெண்டு படங்களைத் தயாரித்தேன். அது சரிப்பட்டு வரலேன்னதும் தொழில்துறைப் பக்கம் போய்ட்டேன். இப்பக்கூட 1200 கோடில ஒரு ஃபேக்டரி கட்டும் வேலையை ஆரம்பிச்சுட்டேன். பாபு விஜய் 100 கோடி பட்ஜெட்டில் கதைசொன்னால் நான் தயாரிக்கத் தயார்”.
ரிச்சர்ட் எம்.நாதன், “நம்முடன் பயணிப்பவர்கள் நல்ல உயரத்திற்கு வரும் போது நமக்குப் பெருமையாக இருக்கும். பாபு விஜய் இந்த இடத்திற்கு வந்திருப்பது அதே போல் தான். தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் அவரே இருப்பதால், எதையும் எதிர்ப்பார்க்காமல் என்னால் முடிந்த உழைப்பைக் கொடுத்திருக்கேன்”.
சினேகன், “இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கேன். இரண்டுமே கிரிஷ் இசையில் நல்லா வந்திருக்கு”.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “நம்ம சினிமாதுறையிலிருந்து விஜய் முதல்வராகியிருக்கார். முதல்வர் விஜய்யை வைத்து ‘கத்தி’, ‘துப்பாக்கி’, ‘சர்கார்’ என மூன்று ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் முருகதாஸ் இருக்கிறார். அதிலும் ‘சர்கார்’ மூலம் நீங்கள் சொன்னது இப்ப நடந்துருச்சு. இப்ப விஜய் சர்கார் வந்திருச்சு. அடுத்து முதல்வர் விஜய்யின் தம்பி ஜெய் இப்படத்தின் ஹீரோ, பேரிலேயே முதல்வர் பேரை வைத்திருக்கும் டைரக்டர் பாபு விஜய். அதனால் இப்படம் செம ஹிட்டாகும். சினிமாத்துறைக்கு ஏகப்பட்ட நல்ல காரியங்களை முதல்வர் விஜய் செய்வார், அதுக்கு ஜெய் சப்போர்ட்டா இருப்பார். சினிமாவில் விஜய்யின் நம்பர் ஒன் இடத்தை ஜெய் நிரப்புவார்”.
டைரக்டர் சசி, “படத்தின் தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் இருப்பது பெரிய அக்னிப்பரீட்சை. அதில் பாபு விஜய் முதல் வெற்றி பெற்றுள்ளார்”.
ஏ.ஆர்.முருகதாஸ், “என்னிடம் வேலை பார்த்த பனிரெண்டு உதவி இயக்குனர்கள் இப்போது இயக்குனர்களாகி பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்ப பாபு விஜய் டைரக்டரானது மட்டுமல்ல, அவனே தயாரிப்பாளராகவும் மாறி ஆச்சர்யப்படுத்துகிறான். சர்கார் படத்தின் போது பெரிய சிக்கல் வந்து நான் தலைமறைவாக இருந்த போது என்னுடனே இருந்தவன் பாபு விஜய். எனது படங்களின் பாதி வேலையை அவனே முடித்து என்னை சோம்பேறியாக்கிவிடுவான். அந்தப் படத்தின் புரமோ பேட்டியில் பழ.கருப்பையா சார் அடிக்கடி இவன் பேரத்தான் சொன்னார். அந்தளவுக்கு எல்லாருடன் நெருக்கமாகிருவான். எனது சிஷ்யன் வெற்றி எனது வெற்றி”.
பாபு விஜய், “முருகதாஸ் சாரிடம் சர்கார் படத்தில் வேலை செய்யும் போது விஜய் சாருடன் ஒரு போட்டோ எடுத்தேன். அவரை வைத்து படம் டைரக்ட் பண்ண வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. ஆனால் இப்ப முதல்வர் விஜய்யின் சர்க்காரில் எனது முதல் படம் ரிலீசாகிறது. சூர்யா சாரின் ‘கருப்பு’ 14-ஆம் தேதி ரிலீசாகுது. அதுக்கடுத்த நாள் எங்க படம் ரிலீசாகுது. ‘கருப்பு’க்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்க படத்துக்கு வந்து ஆதரவு கொடுங்க. அந்தப் படத்தை பார்த்தவர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுங்க”.
ஹீரோ ஜெய், “பொதுவா ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்களின் கஷ்டங்கள் தெரியாது. அவர்கள் யாரிடம் ஃபைனான்ஸ் வாங்குகிறார்கள், எவ்வளவு வட்டி கட்டுகிறார்கள்னு எதுவுமே தெரியாது. நானும் அதே போல் தான். ஆனால் இந்தப் படத்தில் பாபு விஜய் பட்ட கஷ்டங்களைப் பார்த்த பிறகு தயாரிப்பாளர்களின் நிலைமை புரிதது. பாபு விஜய்யின் கடின உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய ஹிட்டாகணும்,ஹிட்டாகும்”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.