காந்திக்கு வந்த சோதனை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கி.பி.1670 இல் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் அரண்மனை கட்டிடத்தில் அமைந்திருக்கிறது, காந்தி நினைவு அருங்காட்சியகம். 1959 இல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கரங்களால் திறந்துவைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, “அமைதிக்கான அருங்காட்சியங்களில்” ஒன்றாகவும் திகழ்கிறது. மகாத்மா காந்தி சுடப்பட்டபோது அணிந்திருந்த இரத்தகறைப் படிந்த மேல் துண்டு உள்ளிட்டு, அவர் பயன்படுத்திய பொருட்கள் அரிய புகைப்படங்கள் இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதையடுத்து அருங்காட்சியத்தை, முதல்வர் ஜோசப் விஜய் செப்-28 அன்று திறந்து வைத்தார். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களோடு, அருங்காட்சியகத்தின் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டிருந்தாலும், காந்தி மியூசியம் வரலாற்றில் இல்லாத புதிய வகை மாற்றமாக, நுழைவுக்கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருப்பதுதான் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதிலும் வளாகத்தில் நுழைவுக்கட்டணமாக 20 ரூபாயை வசூலிப்பதோடு, உள்ளே அருங்காட்சியத்தை பார்வையிட அதற்கும் தனியே ரூ10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளைப்போல, காந்தி மியூசியத்தையும் மாற்றிவிட்டதுதான் கொடுமை. அட, இது என்ன காந்திக்கு வந்த சோதனை என்பதாக எல்லோரையும் நோகும்படி செய்துவிட்டது, அரசின் கட்டண வசூல் நடைமுறை.

—       ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.