அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கஞ்சா விக்கிறவன் கிட்ட கேளு … இங்க வந்து கத்தாத … அடாவடி போலீசு ! முதல்வருக்கு பறந்த கடிதம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

கஞ்சா புழக்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக, தமிழக முதல்வர் விஜய் பேசிவரும் நிலையில், திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் வரைமுறையின்றி விற்கப்படும் கஞ்சாப்புழக்கத்தை தடுத்து நிறுத்தக்கோரியும்; கஞ்சா வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், போராடிய தங்களது கட்சி நிர்வாகிகளையும் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களையும் அராஜகமாகவும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
அந்த கடிதத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு Chief Minister of Tamil Nadu. திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காஜா பேட்டை பகுதியில் தொடர் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை.
காஜா பேட்டை பசுமடம் பகுதியில் நடைபெறும் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மொத்த விற்பனை கும்பல் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பசு மடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதோடு மக்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தும் பரக்கத் நிஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட துணைச் செயலாளர் க. ஆயிஷா தலைமையில் 10.06.2026 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் காஜா பேட்டை அரச மரத்தடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2026 June 11 - 17 Angusam Book

இதில் மாவட்ட தலைவர் எஸ்.பார்வதி, செயலாளர் ஏ. அஞ்சுகம், பொருளாளர் எம்.சுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் ஜெய்லானி, மாரியம்மாள், ஹீரா பானு, சரஸ்வதி, அம்சவல்லி, சகிலா பானு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, அனைத்திந்திய மாணவர் மன்றத்தின் மாநில தலைவர் க.இப்ராகிம், பொன்மலை பகுதி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் துவங்கியவுடன் கும்பலாக வந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. கலைந்து செல்லுங்கள், இல்லாட்டி கைது செய்து விடுவேன் என்று போராட்டக்காரர்களை அச்சுறுத்தினார்கள். மேலும் சௌடால் பேசாதீங்க, கஞ்சா விற்பவன் எல்லாம் உங்களுடைய ஆட்கள் தான் பண்றாங்க, உங்க ஏரியாக்காரங்க தானே, நீங்க போய் தடுத்து நிறுத்துங்க, தட்டிக் கேளுங்க, நீங்க போயி ஏரியால கஞ்சா விக்கிறவன் கிட்டயே பேச வேண்டியது தானே, இங்க வந்து கத்தாத, ஒழுங்கா போயிரு, இல்ல களி திங்கணும் என்று கூறி போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தினார்கள்.
மேலும் போராட்டக்காரர்களை நோக்கி கிளம்புறியா இல்லையா, சும்மா விடமாட்டேன், ரெக்கவர் பண்ணுங்க எல்லாரையும், ஜெயிலுக்கு அனுப்பினால் தான் புத்தி வரும், ஒழுங்கா கலைஞ்சு போயிரு என்று போலீசார் அராஜகமான முறையில் மீண்டும் போராட்டக்காரர்களை ஒருமையிலும், அச்சுறுத்தும் வண்ணமும் கொச்சைப்படுத்தினர்கள். இவ்வாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் சீருடை அல்லாத காவலர்கள் பெண்களை அநாகரிகமாகவும் அசிங்கமாகவும் பேசினார்கள்.
பாதிக்கப்பட்டு போராடு மக்களை கொச்சைப்படுத்துவது நியாயம்தானா, உரிமையில் பேசுவதும் அவதூறாக பேசுவதும் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சாட்டுவதும் எந்த வகையில் ஏற்புடையது. ஒரு சில காவலர்களின் இது போன்ற செயல்பாடால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுவிடும். பாதிக்கப்பட்ட மக்களே கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த சொல்வது ஏற்புடையதா.?
இவ்வாறு செயல்பட்டு காவல்துறையினரின் ஒட்டுமொத்த கௌரவத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்திய பாலக்கரை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் சீருடை இல்லாத காவலர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.