குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

என்னதான் நாளுக்கு ஒரு தினம் என அனுசரித்தாலும், அவை பெரும்பாலும் சடங்குத்தனமான நடைமுறையாக மாறிவிட்டது என்பதுதான் யதார்த்தம். அந்த தினத்தின் உண்மையான பொருள் அறிந்து கடைபிடிப்பதென்பது அரிதிலும் அரிதானது. ஆனால், இதற்கு மத்தியில்தான் உள்ளார்ந்த பிணைப்போடு, செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் ‘சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இது, தமிழகத்தின் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதை பெற்ற சேவை – கோவிந்தராஜ் நிர்வகிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி என்பது கூடுதல் சிறப்பு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வண்ணமயமான பலூன்கள், மலர்கள் மற்றும் குழந்தைகளால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளால் மிளிர, மழலையர் வகுப்பின் குட்டி நட்சத்திரங்கள், தங்கள் தாத்தா-பாட்டிகளுக்காகப் பாடிய பாடல்கள், ஆடிய நடனங்கள் மற்றும் இனிமையான பேச்சுக்கள் என விழாக்கோலம் கண்டது பள்ளி வளாகம். நிகழ்வில் பங்கேற்ற தாத்தா – பாட்டிகளிடமிருந்து சிதறிய சிரிப்பொலிகளாலும் அவர்களிடத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அந்த வளாகத்தை மட்டுமல்ல; இந்த செய்தியை வாசிக்கும் நம்மையும் சேர்த்தே ஆழ்த்திவிட்டது, இந்நிகழ்வு.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

—   கோவிந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.