அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் !

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மேலாண்மைத் துறை தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் பச்சைமலையில் பசுமைநடை பயணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையான பச்சைமலை சூழலியல் வளம் நிறைந்தது. அரியவகை தாவரங்கள் மரவகைகள், எங்கும் காணக் கிடைக்காத அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மூலிகைகள், பலா, அன்னாசி மற்றும் தானியங்கள் நிறைந்தது.

2026 June 11 - 17 Angusam Book

திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் !
திருச்சி கல்லூரி மாணவிகள் பச்சைமலையில் பசுமை நடை பயணம் !

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

எல்லாக் காலங்களிலும் பசுமையான மலைவளம், தூய்மையானக் குளிர்க்காற்று, சுகாதாரமான வாழிடங்கள் அமைதியான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க பச்சைமலையில் செண்பகம் காளியம்மன் கோயில் திட்டுப்பகுதியில் 4 கிலோமீட்டர் பசுமை நடைப் பயணம் மேற்கொண்டனர்.

மூங்கில் வளங்களும் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளும் அடர் மரங்கள் சூழ் வனத்தினுள் பசுமைநடை மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியும் இயற்கையின் மகத்துவத்தையும் மாண்பையும் புரிந்துகொள்ளக் கூடிய அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது.இந்நிகழ்வில் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்ற செயலாளர் பேரா.கி.சதீஷ் குமார் தலைமையேற்று அழைத்துச் சென்றார்.

மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் திருமதி.வித்யா மாணவர் மன்ற பொறுப்பாளர் செல்வி.யுவராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.